முகப்பு
செய்திகள்

தீபாவளியன்று ரஜினியுடன் போட்டியிடும் அமீர் கான் & அஜய் தேவ்கன்!

கோலிவுட்டில் இந்தளவுக்குப் போட்டி இருக்குமா? அல்லது தனிக்காட்டு ராஜாவாக 2.0 வெளியாகுமா?

Updated On : 18 ஏப்ரல், 2017 at 11:22 AM
பகிர்:

தீபாவளியன்று ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் 2.0 வெளிவருகிறது.

அன்றைய தினம் ஹிந்தியில் வேறு இரு பெரிய படங்களும் வெளியாகவுள்ளன. இதனால் உலகளவில் இம்மூன்று படங்களிடையே பலத்த போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

"கபாலி' படத்தையடுத்து ரஜினி நடித்து வரும் படம் "2.0'. "எந்திரன்' படத்தின் இரண்டாம் பாகம் என்று சொல்லப்படும் இப்படத்தை ஷங்கர் எழுதி இயக்குகிறார். ரஜினிகாந்துக்கு இணையான கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் நடிக்கிறார். கடந்த ஒரு வருடத்துக்கு மேலாக இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் சில முக்கிய காட்சிகள் மற்றும் ஒரே ஒரு பாடல் மட்டும் மீதமுள்ள நிலையில், டப்பிங் உள்ளிட்ட இறுதிக் கட்டப் பணிகள் நடந்து வருகின்றன. ரஜினி மற்றும் எமி ஜாக்சன் பங்கேற்கும் பாடல் காட்சியின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் படப்பிடிப்பு நிலையத்தில் படமாக்கப்படவுள்ளது. இதற்காக ரஜினி ஒதுக்கி தரும் கால்ஷீட்டுக்காக படக்குழு காத்திருக்கிறது. படப்பிடிப்பு முழுவதும் ஏப்ரல் மாத இறுதிக்குள் முடிவுக்கு வரும் எனத் தெரிகிறது. இதையடுத்து தீபாவளி வெளியீடாக படத்தைத் திரைக்குக் கொண்டு வருவதற்கான வேலைகளில் இறங்கியுள்ளது படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா.

Advertisement

அமீர் கான், ஸைரா வாசிம் நடிப்பில் அத்வைத் சந்தன் இயக்கத்தில் உருவாகிவரும் சீக்ரெட் சூப்பர் ஸ்டார் படமும் தீபாவளியன்றுதான் வெளிவருகிறது. இது முதலில் ஆகஸ்ட் மாதம் வெளிவருவதாக இருந்தது. ஆனால் ஷாருக் கான் படத்துடன் போட்டியிடவேண்டாம் என்பதால் ரஜினியுடன் இதுபற்றி பேசிவிட்டு புதிய வெளியீட்டுத் தேதியை அறிவித்தார் அமீர் கான். 

தற்போது கோல்மாட் அகைன் படமும் தீபாவளியன்று வெளிவரவுள்ளதாக அதிகாரபூர்வத் தகவல் வெளியாகியுள்ளது. ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் அஜய் தேவ்கன், தபு, பரிநீத்தி சோப்ரா போன்றோர் நடித்துள்ள இந்தப் படமும் தீபாவளிப் போட்டியில் களமிறங்கியுள்ளது. இதனால் பாலிவுட்டில் தீபாவளி பரபரப்பு இப்போதே ஆரம்பித்துவிட்டது.

கோலிவுட்டில் இந்தளவுக்குப் போட்டி இருக்குமா? அல்லது தனிக்காட்டு ராஜாவாக 2.0 வெளியாகுமா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.