முகப்பு
செய்திகள்

பாகுபலி 1 மறுவெளியீடு: ஏமாற்றம் அளித்த வசூல்!

இந்தியா முழுக்க ஆயிரம் திரையரங்குகளில் வெளியான பாகுபலி 1 படம், வசூலில் ஏமாற்றம் தந்துள்ளது.

Updated On : 19 ஏப்ரல், 2017 at 2:41 PM
பகிர்:

இந்தியா முழுக்க ஆயிரம் திரையரங்குகளில் வெளியான பாகுபலி 1 படம், வசூலில் ஏமாற்றம் தந்துள்ளது.

பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் போன்றோர் நடிப்பில் தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவான படம் - பாகுபலி. இதனை இயக்கியவர், ராஜமெளலி. 

ரூ. 600 கோடி வரை வசூலித்து பல சாதனைகளைச் செய்த பாகுபலியின் 2-ம் பாகமான, 'பாகுபலி தி கன்க்ளூஷன்’ படம் ஏப்ரல் 28 அன்று பாகுபலி 2 வெளிவருகிறது. கீரவாணி இசையில் உருவாகியுள்ள பாகுபலி 2 படத்தின் தமிழ்ப் பாடல்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டன.

Advertisement

கடந்த 7-ம் தேதி, கர்நாடகா தவிர இந்தியாவின் பிற பகுதிகளில் பாகுபலி 1 படத்தின் ஹிந்திப் பதிப்பு, ஆயிரம் திரையரங்குகளில் வெளியானது. 

ஒரு படம் மீண்டும் வெளியாகும்போது அதிகபட்சமாக 100 திரையரங்குகள் கிடைத்தாலே பெரிய விஷயம். ஆனால் இந்தப் படம் 1000 திரையரங்குகளில் வெளியானது இதுவரை இந்திய சினிமா காணாத ஒரு சாதனை என்று மெச்சப்பட்டது.

ஆனால் பாகம் 2-ஐக் காண ஆர்வமாக உள்ள ரசிகர்கள் முதலாம் பாகத்தை மீண்டும் திரையரங்கில் காண பெரிய ஆர்வம் செலுத்தவில்லை. திரையரங்குகள், தொலைக்காட்சி ஒளிபரப்பு, டிவிடி என பல வழிகளில் இந்தப் படத்தை ஏற்கெனவே பார்த்துவிட்டதாலும் மீண்டும் திரையரங்கில் காணவேண்டிய அவசியம் இல்லாமல் போய்விட்டது. முதல் வார இறுதியில் அதிகபட்சமாக ரூ. 2 கோடியை மட்டுமே வசூலித்தது.

இந்நிலையில் பாகுபலியின் ஹிந்திப் பதிப்பு எதிர்பார்த்த அளவுக்கு வசூலை அள்ளாவிட்டாலும் தமிழில் நிச்சயம் நல்ல வசூலைப் பெறும் என்கிற நம்பிக்கையுடன் தமிழ் பாகுபலி 1 ஏப்ரல் 21 அன்று மீண்டும் வெளியாகிறது. அடுத்த வாரம் பாகுபலி 2 வெளியாவதால் இந்தப் படம் ஒருவாரம் மட்டும் திரையரங்கில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.