முகப்பு
செய்திகள்

சிலம்பம் கற்றுக் கொள்கிறார் நடிகை சமந்தா! (வீடியோ)

திடீரென்று சமந்தாவுக்குச் சிலம்பம் விளையாட்டு மீது ஆர்வம் வந்துள்ளது. உடனே...

Updated On : 29 ஜனவரி, 2024 at 2:20 PM
பகிர்:

சிலம்பரசன் எனக்குப் பிடித்த நடிகர் என்று நடிகைகள் பேட்டி கொடுத்துப் பார்த்திருக்கிறோம். ஆனால் சிலம்பம் பிடிக்கும் என்று எந்த நடிகையாவது சொல்லியதுண்டா?

சமந்தா சொல்கிறார்! அதைக் கற்றுக்கொண்டும் வருகிறார்.  

எந்தப் படத்துக்காக இந்தச் சிலம்பப் பயிற்சி என்று கேட்காதீர்கள். திடீரென்று சமந்தாவுக்குச் சிலம்பம் விளையாட்டு மீது ஆர்வம் வந்துள்ளது. உடனே கற்றுக்கொள்ளவேண்டும் என்று முடிவு செய்துவிட்டார். இதைச் சமூகவலைத்தளத்திலும் அறிவித்துவிட்டார்.

ஏனெனில் எனக்குப் புது சவால்கள் பிடிக்கும். புதிய பொழுதுபோக்கு. சிலம்பம். இந்தக் கலையைத் திறம்படக் கற்றுக்கொள்ள விரும்புகிறேன் என்று ட்விட்டரில் கூறியுள்ளார். கூடவே ஒரு வீடியோவையும் வெளியிட்டார்.

இந்த வீடியோ வெளியானபிறகு, சமந்தா இந்தத் திறமையை நிச்சயம் ஒரு படத்தில் வெளிப்படுத்துவார் என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 

தமிழில் அநீதிக் கதைகள், தெலுங்கில் Raja Gari Gadhi 2 போன்ற படங்களில் நடித்துவருகிறார் சமந்தா.

முழு கட்டுரையைப் படிக்க →