செய்திகள்

ஒரு கதாநாயகனுக்கு எதற்கு மூன்று நான்கு கதாநாயகிகள்?: ஜோதிகா கேள்வி!

எழில்

பிரம்மா இயக்கத்தில் ஜோதிகா நடிக்கும் படம், மகளிர் மட்டும். இசை - ஜிப்ரான். இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. 

இவ்விழாவில் ஜோதிகா பேசியதாவது:

பெரிய ஹீரோக்களை வைத்துப் படம் பண்ணும் இயக்குநர்களுக்கு ஒரு கோரிக்கை - உங்கள் படங்களில் கதாநாயகிகளுக்கு நல்ல கதாபாத்திரங்களைக் கொடுங்கள். ஒரு கதாநாயகனுக்கு ஒரு கதாநாயகி போதும். ஹீரோவைக் காதலிக்க எதற்கு 3, 4 கதாநாயகிகள்? 

எனக்கு என் குடும்பம் மிகவும் உதவியாக உள்ளது. அனைவரும் என்னை மிகவும் ஊக்கப்படுத்துகிறார்கள். அப்பா (சிவக்குமார்) எனக்கு தினமும் தம்ஸ் அப் காண்பித்து படப்பிடிப்புக்கு அனுப்புவார்.  

30 வயதுக்கு மேற்பட்ட கதாநாயகிகள் எல்லாம் வயதானவர்களாகக் கருதப்படுகிறார்கள். நிஜ வாழ்க்கையில் உள்ள வயதை விடவும் இளமையாகக் காண்பித்த இயக்குநர் பிரம்மாவுக்கு நன்றி. 12 வயது குழந்தைகளுக்கு அம்மாவாக நடிக்கவே என்னை அழைக்கிறார்கள். ஆனால் சரியான கதாபாத்திரத்தை இயக்குநர் எனக்கு வழங்கியிருக்கிறார். அறம் படத்துக்கு இசையமைத்த ஜிப்ரான் இந்தப் படத்துக்கும் இசையமைத்துள்ளார். பெண்களை மையமாகக் கொண்ட கதைகளுக்கு இசையமைப்பதற்கு நன்றி. 

ஊர்வசி, பானுபிரியா, சரண்யா என மூன்று ஜாம்பவான்களுடன் இணைந்து இந்தப் படத்தில் நடித்துள்ளேன். மறக்கமுடியாத அனுபவம் என்று பேசினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமருகலில் மே 5-இல் கடையடைப்பு

ராமநாதபுரம் அருகே வட மாநில கா்ப்பிணிப் பெண் கொலை

‘பொது வெளியில் கழிவு நீரை திறந்து விட்டால் கடும் நடவடிக்கை’

பரமக்குடி- மதுரை இடையே இடைநில்லா குளிா்சாதன பேருந்து இயக்கக் கோரிக்கை

ஓட்டப்பிடாரம் அருகே மாட்டுவண்டி போட்டி

SCROLL FOR NEXT