செய்திகள்

திரைப்படமாகிறது ஜெயகாந்தனின் “ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம்” நாவல்!

சரோஜினி

ரங்கூன் போர்பின்னணியுடன் கூடிய கதையான ஜெயகாந்தனின் ‘ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம்’ நாவல் தற்போது கிராமத்துப் பின்னணியில் திரைப்படமாகவிருக்கிறதாம். தனது கனவுத் திரைப்படமான இந்த முயற்சி நிஜமாகப் போகிற சந்தோஷம் அதன் இயக்குனர் ஜி.வெங்கடேஷ் குமாரின் வார்த்தைகளில் தெரிகிறது.

60 களின் காலகட்டத்தில் நிகழ்ந்த கதை என்பதால் படமும் கருப்பு வெள்ளைப் படமாகவே திரை தொடுமென்கிறார்கள். அப்போது தான் ஒரு பேரியட் ஃபிலிம் என்ற உணர்வை ஏற்படுத்த முடியுமாம். ஒரு நாவலாக 7 பாகங்களுடன் இருந்தது இந்தக் கதை, திரைக்கதையாக்கப் படும் போது எவ்விதமான மாற்றங்களுடன் இருக்கப் போகிறது என்பதைப் பற்றி அந்நாவலை வாசித்தவர்களுக்கு ஒரு வித எதிர்பார்ப்பு இருக்கும். அந்த எதிர்பார்ப்பை பொய்த்துப் போகச் செய்யாமல் நாவலைத் திரைப்படமாக்கினால் நல்லது. படத்தின் இயக்குனரே தான் தயாரிப்பாளரும் என்பதால் கூடுதல் சுதந்திரம் கிடைக்கக் கூடும். இந்த நாவல் ஜெயகாந்தனின் குறிப்பிடத்தக்க நாவல்களில் ஒன்று என்பதோடு அந்தக் காலகட்டத்தில் பலரால் பேசப்பட்ட, மேற்கோள் காட்டப்பட்ட ஒரு நாவலும் கூட. ஜெயகாந்தனின் பிற நாவல்களைப் போலவே மிகத் தீவிரமாக சமூகப் பிரச்னைகளைப் பற்றிப் பேசிய நாவல்களில் இதுவும் ஒன்று.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அயோத்தி ராமர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வழிபாடு

இவானா டுடே!

த.செ. ஞானவேல் இயக்கத்தில் நானி?

ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு: சென்னையில் தொழிலாளி பலி

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

SCROLL FOR NEXT