செய்திகள்

தணிக்கைக் குழுவில் வித்யா பாலன், கெளதமி!

எழில்

மத்திய திரைப்படத் தணிக்கை வாரியத்தின் (சிபிஎஃப்சி) தலைவர் பதவியில் இருந்து பஹலாஜ் நிஹலானியை மத்திய அரசு நீக்கியுள்ளது. அவருக்குப் பதிலாக அப்பதவிக்கு தேசிய விருது பெற்ற பாலிவுட் பாடலாசிரியரான பிரசூன் ஜோஷி நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் தணிக்கைக் குழுவைச் சேர்ந்த புதிய உறுப்பினர் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.

திரைப்படத் தணிக்கை வாரியத்தின் தலைவராக பிரபல திரைப்படத் தயாரிப்பாளரான பஹலாஜ் நிஹலானி கடந்த 2015-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நியமிக்கப்பட்டார். அவர் இப்பதவியை வகித்த கடந்த இரண்டரை ஆண்டுகளில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. குறிப்பாக அவர் சர்வாதிகாரப் போக்கில் செயல்படுவதாக தணிக்கை வாரியத்தின் மற்ற உறுப்பினர்கள் குற்றம்சாட்டினர்.  அண்மையில், பிரபல இயக்குநர் மதுர் பண்டார்கர் இயக்கிய, நெருக்கடி நிலை காலத்தைச் சித்திரிக்கும் 'இந்து சர்க்கார்' என்ற படத்தில் வெவ்வேறு இடங்களில் காட்சிகளை வெட்டுமாறு தணிக்கை வாரியம் உத்தரவிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், 'லிப்ஸ்டிக் அண்டர் மை பர்க்கா' என்ற படத்தைத் திரையிட தணிக்கை வாரியம் அனுமதி மறுத்ததும் பல்வேறு தரப்பினரால் விமர்சிக்கப்பட்டது. இந்நிலையில், திரைப்படத் தணிக்கை வாரியத்தின் தலைவர் பதவியில் இருந்து பஹலாஜ் நிஹலானியை மத்திய செய்தி-ஒலிபரப்பு அமைச்சகம் வெள்ளிக்கிழமை நீக்கியது. அப்பொறுப்புக்கு பிரபல பாலிவுட் பாடலாசிரியர் பிரசூன் ஜோஷி நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக, இந்தப் பொறுப்புக்கு பிரபல பாலிவுட் திரைப்படத் தயாரிப்பாளர் பிரகாஷ் ஜா, இயக்குநர் மதுர் பண்டார்கர் ஆகியோரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில் தணிக்கைக் குழு உறுப்பினர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. அதில் இடம்பெற்றுள்ள 12 பேர்:

பிரபல பாலிவுட் நடிகை வித்யா பாலன், கெளதமி, ஜீவிதா ராஜசேகர், வாணி திருப்பதி, ஸ்ரீனிவாசையா நாகபாரணா, ரமேஷ் பதாஞ், மிஹிர் பூடா, நரேஷ் சந்தர் லால், நரேந்திர கோலி, நைல், வாமன் கேந்த்ரே, விவேக் அக்னிஹோத்ரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஜீவ் காந்தி நினைவு நாள்...

காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் ஆதிசங்கரா் ஜெயந்தி மகோற்சவம் நிறைவு

ஐபிஎல் தொடருக்குப் பின் எம்.எஸ்.தோனியின் 7 நிமிட விடியோ!

மீண்டும் ஆட்சிக்கு வந்தால்... நவீன் பட்நாயக்கின் முதல் உத்தரவு!

கால் முளைத்த நிலவு! ஜான்வி கபூர்..

SCROLL FOR NEXT