புகழ்பெற்ற அதிரடி நடிகர் புரூஸ்லியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமாகிறது. இயக்குனர் சேகர் கபூர் புரூஸ் லீயின் வாழ்க்கை நிகழ்வுகளையும் மர்மமான முறையில் அவர் இறந்ததையும் மையப்படுத்தி திரைக்கதை எழுதி, படத்தினை இயக்குகிறார். ‘லிட்டில் டிராகன்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளதாக சமீபத்தில் பேட்டியொன்றின் சேகர் கபூர் தெரிவித்துள்ளார்.
லிட்டில் டிராகன் படத்தின் திரைக்கதையை சேகர் கபூருடன் இணைந்து புரூஸ்லீயின் மகள் ஷனோன் லீ எழுதியிருக்கிறார். இப்படத்தை ‘புரூஸ் லீ எண்டர்டெய்ன்மெண்ட்’ நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். இத்திரைப்பட அறிவிப்பு வெளியானதிலிருந்து படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. காரணம் 1950-களில் புகழின் உச்சத்தில் இருந்த புருஸ் லீ அன்றைய இளைஞர்கள் பலரின் கனவு நாயகன். உலகம் முழுவதும் புரூஸ் லீக்கும் ரசிகர்கள் உண்டு. அச்சமயத்தில் ஹாங்காங் நகரில் ஏற்பட்ட பலவித அரசியம் மற்றும் சமூக மாற்றங்களுக்கு மார்ஷல் ஆர்ட் எனும் தற்காப்பு கலைகளின் மேதையான புரூஸ்லீ பெரிதும் கொண்டாடப்பட்டார். புரூஸ் லீ உருவம் பதித்த டீ ஷர்டுகள் இன்றளவும் இளைஞர்கள் பயன்படுத்தி புரூஸ்லீக்கு அழியாப் புகழைப் பெற்றுத் தருகிறார்கள். தன்னம்பிக்கை நட்சத்திரமாக விளங்கிய புரூஸ்லீயின் வரலாற்றை இயக்கும் இயக்குனர் சேகர் கபூர் சர்வதேச அளவில் புகழ்ப்பெற்றவர். போலவே ஏ.ஆர்.ரஹ்மான். அவருடன் இணைந்து சேகர் கபூரின் மகள் காவேரி ஒரு பாடலுக்கு இசையமைக்கிறார். ஆனால் அது படத்திற்கானது அல்ல என்று சேகர் கபூர் தெரிவித்துள்ளார்.
லிட்டில் டிராகன் படத்தின் முதல்கட்ட பணிகள் தொடங்கிவிட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.