ஃபேஸ்புக், ட்விட்டரை விட்டு விலகினார் சிம்பு!
சமூக ஊடங்களில் எதிர்மறை எண்ணங்களே ஆதிக்கம் செலுத்துகின்றன. அதில் பங்கு வகிக்க..
ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட அனைத்துவிதமான சமூகவலைத்தளங்களிலிருந்து விலகுவதாக நடிகர் சிம்பு அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சமூக ஊடங்களில் எதிர்மறை எண்ணங்களே ஆதிக்கம் செலுத்துகின்றன. அதில் பங்கு வகிக்க எனக்குப் பயமாக இருக்கிறது.
Advertisement
ஒரு நட்சத்திரத்துக்கு சமூக ஊடகம் அவசியம் தான். நான் என் மனம் சொல்வதைக் கேட்கிறேன். சமூகவலைத்தளங்களில் இருந்து விலகும் முன்பு சொல்ல விரும்புவது இதுதான். எப்போதும் அன்பைத் தேர்ந்தெடுங்கள் என்று கூறியுள்ளார்.