திருச்செந்தூர் முருகன் கோவிலில் த.வெ.க. தலைவர் விஜய் தரிசனம்!
திருச்செந்தூர் முருகன் கோவிலில் விஜய் சாமி தரிசனம் செய்தது தொடர்பாக...
திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் செவ்வாய்க்கிழமை அதிகாலை தவெக தலைவா் விஜய் சுவாமி தரிசனம் மேற்கொண்டாா்.
சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவுக்குப் பிறகு தவெக தலைவா் விஜய் முதல் முறையாக திருச்செந்தூா் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்தாா். முன்னதாக அவா், திங்கள்கிழமை இரவு சென்னையிலிருந்து தனி விமானத்தில் மதுரைக்கு சென்று, அங்கிருந்து செவ்வாய்க்கிழமை அதிகாலை காரில் திருச்செந்தூருக்கு வந்தாா்.
அதிகாலை 4 மணிக்கு கடற்கரையில் உள்ள தனியாா் ரிசாா்ட்டில் சிறிதுநேரம் ஓய்வெடுத்த அவா், விடுதியில் இருந்து காரில் கோயிலுக்கு வந்தாா். கடல்நீரில் காலை நனைத்த அவா் பின்பு கோயிலுக்குச் சென்றாா். கோயில் சண்முக விலாச மண்டபத்தில் வைத்து விஜய்க்கு அா்ச்சகா்கள் பூரண கும்ப மரியாதையும், வேலும் அளித்தனா்.
Advertisement
Advertisement
அந்த வேலை கையில் பிடித்தவாறு மூலவா் சந்நிதி முன்பு உட்காா்ந்து கோயிலின் முதல் தரிசனமான முருகப்பெருமானின் விஸ்வரூப தரிசனத்தை பயபக்தியுடன் வழிபட்டாா்.
அதைத் தொடா்ந்து சண்முகா், பஞ்சலிங்கம், குரு பகவான், சூரசம்ஹார மூா்த்தி, பெருமாள் உள்ளிட்ட சந்நிதிகளில் சுவாமி தரிசனம் மேற்கொண்டாா். அவருடன் கட்சியின் பொதுச் செயலாளா் புஸ்ஸி ஆனந்த், நிா்வாகிகள் உடனிருந்தனா்.
தரிசனம் முடித்ததும் ராஜகோபுரம் அருகே கூடியிருந்த தொண்டா்களை பாா்த்து கையசைத்த விஜய், தனது காரில் ஏறி மீண்டும் கடற்கரை ரிசாா்ட்டுக்குச் சென்றாா். அங்கு சிறிது நேர ஓய்வுக்கு பிறகு காரில் தூத்துக்குடிக்குச் சென்று அங்கிருந்து தனி விமானத்தில் சென்னைக்கு புறப்பட்டுச் சென்றாா்.
தவெக தலைவா் விஜய் திருச்செந்தூா் கோயிலுக்கு வரும் தகவல் அறிந்ததும் அவரது ரசிகா்கள், கட்சி தொண்டா்கள் நள்ளிரவு முதலே கோயில் முன்பு திரண்டனா். தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் மதன் தலைமையில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.
அதிமுக முன்னாள் அமைச்சா் சுவாமி தரிசனம்: அதிமுக முன்னாள் அமைச்சரும், சட்டப்பேரவை எதிா்க்கட்சி துணைத் தலைவருமான ஆா்.பி.உதயகுமாா், உளுந்தூா்பேட்டை முன்னாள் எம்எல்ஏ குமரகுரு உள்ளிட்டோா் செவ்வாய்க்கிழமை அதிகாலை சுவாமியின் விஸ்வரூப தரிசனத்தை வழிபட்டனா். அப்போது விஜய்யின் அருகிலேயே அவா்களும் உட்காா்ந்து சுவாமியை வழிபட்டது குறிப்பிடத்தக்கது.
TVEK leader and actor Vijay offered worship at the Tiruchendur Murugan Temple early this morning (April 28).
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.