வாழப்பாடி அருகே முத்துமலை முருகன் கோயிலில் எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம்
முத்துமலை முருகன் கோயிலில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம் மேற்கொண்டது பற்றி...
வாழப்பாடி அருகே உலகிலேயே மிக உயரமான 146 அடி உயரம் கொண்ட ஸ்ரீ முத்துமலை முருகன் கோயிலில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெள்ளிக்கிழமை சாமி தரிசனம் செய்தார்.
அவருக்கு கோயில் நிர்வாகம் பூரண கும்ப மரியாதை செலுத்தினர். பின்னர் எடப்பாடி பழனிசாமி ராஜகோபுர நுழைவு வாயிலைத் திறந்து வைத்தார். தொடர்ந்து மூலவர் முருகப்பெருமானை சாமி தரிசனம் செய்தார். பின்னர் வருகிற 25ஆம் தேதி ராஜகோபுரம் கும்பாபிஷேக விழாவையொட்டி யாகசாலைக்கு சென்றார்.
அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் முருகப்பெருமான் சாமி படம் வழங்கப்பட்டது. இதையடுத்து வெள்ளியில் வேல் வழங்கப்பட்டது. அதனைக் கையில் ஏந்திய படி யாகசாலை சுற்றி வந்து சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து, நாதஸ்வரத்தில் ஒலித்த முருகன் பக்திப் பாடலைக் கேட்டு, கண்ணை மூடிக்கொண்டு அப்படியே இசையோடு ஒன்றிவிட்டார்.
Advertisement
Advertisement
இதில் சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன், கெங்கவல்லி சட்டப்பேரவை உறுப்பினர் நல்லதம்பி, ஆத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் ஜெயசங்கரன் மற்றும் அதிமுக கட்சி நிர்வாகிகள் ஏராளமான கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
On Friday, former Chief Minister Edappadi K. Palaniswami offered prayers at the Sri Muthumalai Murugan Temple near Vazhappadi, which houses the world's tallest 146-foot Murugan statue.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.