FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

நவ. 22-ல் குமரக்கோட்டம் முருகன் கோயிலில் குடமுழுக்கு!

காஞ்சிபுரம் குமரக்கோட்டம் முருகன் கோயிலில் குடமுழுக்கு விழா நடைபெறவுள்ளது குறித்து...

நவ. 22-ல் குமரகோட்டம் முருகன் கோவிலில் குடமுழுக்கு! - படம்: தினமணி
பகிர்:

18 ஆண்டுகளுக்குப் பின் கந்தப்புராணம் அரங்கேறிய திருக்கோவிலான ஶ்ரீ குமரக்கோட்டம் முருகன் கோயிலில் நவம்பர் 22 ஆம் தேதி குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது.

காஞ்சிபுரம் மாநகராட்சி உள்பட்ட மேற்கு ராஜ வீதியில் அமைந்துள்ள கந்தப்புராணம் அரங்கேறிய திருக்கோயிலான அருள்மிகு ஸ்ரீ குமரக்கோட்டம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் 18 ஆண்டுகளுக்குப் பின் கோவில் புணரமைப்பு பணி நிறைவு பெற்று நவம்பர் 22 ஆம் தேதி குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது,

இந்தக் கோயில் திருப்பணிகளுக்காக கடந்த 2024 பிப். 26-ம் தேதி பாலாலயம் நடைபெற்றது. தொடர்ந்து, ரூ. 66.48 லட்சம் மதிப்பீட்டில் 16 வகையான சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Advertisement

Advertisement

குடமுழுக்கு விழாவையொட்டி, இன்று (நவ. 1) கோயிலில் பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், கோயில் செயல் அலுவலர், குடமுழுக்கு விழா கமிட்டி உறுப்பினர்கள் ராதாகிருஷ்ணன், முருகேசன், துரைப்பாசையப்பன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

கோயிலில் நடைபெற்ற பந்தக்கால் நடும் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் உடனிருந்து, ஒன்றிணைந்து குடமுழக்கு விழா பந்தக்காலை நட்டனர்.

summary

The consecration ceremony (kudamuzhukku vizha) is set to take place on November 22nd at the Sri Kumarakottam Murugan Temple in Kanchipuram—the very temple where the *Kanda Puranam* was first presented 18 years ago.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments