செய்திகள்

ரசிகர்களைத் தூங்கவிடுங்கள்: நள்ளிரவில் வெளியிடப்படும் டிரெய்லர்களுக்கு தனஞ்ஜெயன் எதிர்ப்பு!

எழில்

நள்ளிரவில் வெளியிடப்படும் பெரிய நடிகர்களின் டிரெய்லர், டீசர்களுக்குப் படத்தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அவர் எழுதியதாவது:

பிரபல நடிகர்களின் இயக்குநர்களுக்கு ஒரு வேண்டுகோள். உங்கள் ரசிகர்களைத் தூங்கவிடுங்கள். மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களின் டிரெய்லர்கள், டீசர்களைக் காலையில் வெளியிடுங்கள். நள்ளிரவு 12.01 மணிக்கு வெளியிடுவது நல்லதல்ல என்று அறிவுரை கூறியுள்ளார்.

சிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள விவேகம் பட டிரெய்லர் நேற்று நள்ளிரவு 12.01 மணிக்கு வெளியிடப்பட்டது. இதனால் அஜித் ரசிகர்கள் காத்திருந்து டிரெய்லரைக் கண்டுகளித்தார்கள். பிறகு அதைச் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்தும் மகிழ்ந்தார்கள். இதேபோல பெரிய நடிகர்களின் படங்களின் டிரெய்லர், டீசர், பாடல்கள் ஆகியவை பெரும்பாலும் நள்ளிரவில் வெளியிடுவது வழக்கம்.  இதையடுத்து தனஞ்ஜெயன் இந்த வேண்டுகோளையும் எதிர்ப்பையும் பதிவு செய்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இரு கட்டத் தோ்தலும் பாஜகவுக்கு சாதகம்: பிரதமா் மோடி

விடைத்தாள்களில் ‘ஜெய் ஸ்ரீராம்’ எழுதிய கல்லூரி மாணவா்கள் தோ்ச்சி: 2 பேராசிரியா்கள் பணியிடை நீக்கம்

மணிப்பூா்: தீவிரவாத தாக்குதலில் 2 சிஆா்பிஎஃப் வீரா்கள் உயிரிழப்பு

வறட்சி பாதித்த 22 மாவட்டங்களுக்கு குடிநீா் விநியோகிக்க ரூ.150 கோடி: முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவு

ஹெச்சிஎல் நிகர லாபம் ரூ.3,986 கோடியாக உயா்வு

SCROLL FOR NEXT