முகப்பு
செய்திகள்

அட! இன்று எந்தவொரு தமிழ்ப்படமும் வெளியாகவில்லை!

வேறு எந்த வெள்ளிக்கிழமையும் இதுபோன்ற ஒரு நிலைமையைச் சந்தித்ததில்லை...

Updated On : 29 ஜனவரி, 2024 at 4:41 PM
பகிர்:

ஆகஸ்ட் 24 அன்று சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள விவேகம் வெளிவருகிறது.

இதன் தாக்கம் தமிழ் சினிமாவில் அதிகமாக உள்ளது. இதையடுத்து இன்று எந்த ஒரு புதுத் தமிழ்ப்படமும் வெளியாகவில்லை. 

இந்த வருடம், வேறு எந்த வெள்ளிக்கிழமையும் இதுபோன்ற ஒரு நிலைமையைச் சந்தித்ததில்லை. இந்த வாரம் எந்தப் படத்தை வெளியிட்டாலும் அடுத்த வாரம் விவேகம் படத்தால் பாதிப்பு ஏற்படும் என்பதால் இன்று புதுப்படங்கள் வெளியாவது தள்ளிவைக்கப்பட்டுள்ளன. மேலும் கடந்த வாரம் தனுஷ் நடித்துள்ள வேலையில்லா பட்டதாரி 2, ராம் இயக்கிய தரமணி போன்ற ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த இரு படங்கள் வெளியாகின. இரு படங்களும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதாலும் இன்று புதுப்படங்கள் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. அடுத்த வாரம் விவேகம் வெளியான பிறகு செப்டம்பர் மாதம் பல பெரிய படங்கள் வெளிவரவுள்ளன.

சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் - விவேகம். இப்படத்தில் காஜல் அகர்வால், அக்‌ஷரா ஹாசன், விவேக் ஓபராய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். வில்லன் வேடத்தில் பாலிவுட் நடிகர் விவேக் ஓப்ராய் நடித்துள்ளார். இது அவர் நடிக்கும் முதல் தமிழ்ப் படம். இந்தப் படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்துள்ளது. இசை - அனிருத்.

விவேகம் படம் தணிக்கையில் யு/ஏ சான்றிதழ் பெற்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.