செய்திகள்

விவேகம்: கேரளா முதல் நாள் வசூல் ரூ. 3 கோடி என அதிகாரபூர்வத் தகவல்!

கேரளாவில் 303 திரையரங்குகளில் விவேகம் வெளியானது. காலை 5 மணிக்கு முதல் காட்சி திரையிடப்பட்டுள்ளது...

எழில்

சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் - விவேகம். இப்படத்தில் காஜல் அகர்வால், அக்‌ஷரா ஹாசன், விவேக் ஓபராய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். வில்லன் வேடத்தில் பாலிவுட் நடிகர் விவேக் ஓப்ராய் நடித்துள்ளார். இது அவர் நடிக்கும் முதல் தமிழ்ப் படம். இந்தப் படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்துள்ளது. இசை - அனிருத். விவேகம் படம் தணிக்கையில் யு/ஏ சான்றிதழ் பெற்றுள்ளது.

இந்தப் படம் நேற்று வெளியானது. படத்துக்குக் கலவையான விமரிசனங்கள் வெளிவந்தாலும் வசூலில் பல சாதனைகளைப் படைக்கும் என்பது முதல் நாள் வசூல் விவரங்களில் இருந்து தெரியவருகிறது.

சென்னையில் மட்டும் விவேகம் படம் ரூ. 1.21 கோடி வசூலித்துள்ளது. இது கபாலியின் முதல் நாள் வசூலை விடவும் அதிகம். இதோடு முதல் நாளன்று விவேகம் படம் ரூ. 30 கோடி வசூலித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் கேரளாவில் விவேகம் படம் பெற்றுள்ள வசூல் குறித்த அதிகாரபூவத் தகவல் வெளியாகியுள்ளது.

கேரளாவில் 303 திரையரங்குகளில் விவேகம் வெளியானது. காலை 5 மணிக்கு முதல் காட்சி திரையிடப்பட்டுள்ளது. கேரள விநியோக உரிமையைப் பெற்ற டொமிச்சன், கேரள முதல் நாள் வசூல் விவரங்களை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதன்படி கேரளாவில் முதல் நாள் வசூலாக ரூ. 2.90 கோடியைப் பெற்றுள்ளது விவேகம் படம். முதல்நாளிலேயே கிட்டத்தட்ட ரூ. 3 கோடியை எட்டியுள்ளதால் வருகிற விடுமுறை நாள்களில் இன்னும் கூடுதலாக வசூலித்து புதிய சாதனைகளைப் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோல கர்நாடகாவில் விவேகம் படத்துக்கான முதல் நாள் வசூல், ரூ. 3 கோடியைத் தாண்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. எனினும் இதுகுறித்த அதிகாரபூர்வத் தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு-காஷ்மீரில் 3 துருப்பிடித்த பீரங்கி குண்டுகள் கண்டுபிடிப்பு

காந்தப் பார்வை... ஸ்ருஷ்டி பன்னாட்டி!

டிஎஸ்பி சிராஜ்..! வெளிநாட்டில் 100 விக்கெட்டுகள்!

3 தேசிய விருதுகள்! பார்க்கிங் படக்குழுவை வாழ்த்திய கமல் ஹாசன்!

நிறைவடையும் தங்க மகள்... மகளே என் மருமகளே தொடரின் ஒளிபரப்பு அறிவிப்பு!

SCROLL FOR NEXT