செய்திகள்

‘விவேகம்’ விமரிசனங்கள் தொடர்பான சர்ச்சை: விமரிசகர்களுக்கு ஜிவி பிரகாஷ் கோரிக்கை!

எழில்

சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் - விவேகம். இப்படத்தில் காஜல் அகர்வால், அக்‌ஷரா ஹாசன், விவேக் ஓபராய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். வில்லன் வேடத்தில் பாலிவுட் நடிகர் விவேக் ஓப்ராய் நடித்துள்ளார். இது அவர் நடிக்கும் முதல் தமிழ்ப் படம். இந்தப் படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்துள்ளது. இசை - அனிருத். விவேகம் படம் தணிக்கையில் யு/ஏ சான்றிதழ் பெற்றுள்ளது.

இந்தப் படம் கடந்த வியாழன் அன்று வெளியானது. படத்துக்குக் கலவையான விமரிசனங்கள் வெளிவந்தாலும் வசூலில் பல சாதனைகளைப் படைத்துவருகிறது. தன்னுடைய யூடியூப் தளத்தில் விவேகம் படத்தைக் கடுமையாக விமரிசனம் செய்திருந்தார் ‘ப்ளூசட்டை’ மாறன். இதற்குத் தமிழ்த்திரையுலகில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இயக்குநர்களும் பல்வேறு திரையுலகப் பிரபலங்களும் இதுதொடர்பாக கருத்து கூறியுள்ளார்கள். இயக்குநர் விஜய் மில்டன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். திரைப்படச் சங்கங்கள் ப்ளூசட்டை மாறன் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என ராகவா லாரன்ஸ் கோரிக்கை விடுத்துள்ளார். 

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் கூறியதாவது: 

தயாரிப்பாளரும் விநியோகஸ்தர்களும் ஒரு படத்துக்காகக் கோடிக்கணக்கில் செலவு செய்கிறார்கள். ஒரு படத்தை விமரிசனம் மூலம் மட்டம் தட்டுவது நியாயமல்ல. விமரிசகர்கள் ஒரு படத்துக்குக் குறைந்தபட்சம் மூன்று நாள்களாவது அவகாசம் அளிக்கவேண்டும். ஒரு படத்தைப் பார்க்க வேண்டுமா வேண்டாமா என்பதை மக்கள் முடிவு செய்யட்டும். அல்லது பட வசூல் மக்களின் விருப்பத்தை நிரூபிக்கும். அது யாருடைய படமாக இருந்தாலும் சரி. திரைத்துறையின் பக்கம் நான் நிற்கிறேன் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகளிா் காங்கிரஸ் நிரவாகிகள் குடியரசு தலைவருக்கு மனு

மதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

25 அரசுப் பள்ளிகள் நூறு சதவீதம் தோ்ச்சி

தேரோடும் வீதியில் புதைவிட மின்கம்பி அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

வா்ணம் பூசும் தொழிலாளி கீழே தவறி விழுந்து பலி

SCROLL FOR NEXT