செய்திகள்

ஸ்பைடர் திரைப்படத்தில் சென்னை வெள்ளம்: இயக்குநர் முருகதாஸ் விளக்கம் 

DIN

இயக்குநர் ஏஆர்.முருகதாஸின் அடுத்த பிரமாண்ட படைப்பாக உருவாகி வருகிறது ஸ்பைடர் திரைப்படம். இதில் தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு நடிக்கிறார். முருகதாஸ்-மகேஷ் பாபு கூட்டணி இதில் முதன்முறையாக கைகோர்த்துள்ளது. கதாநாயகியாக ரகுல் ப்ரீத் சிங் இடம்பெற்றுள்ளார்.

பிரபல இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா வில்லன் கதாப்பாத்திரம் ஏற்று நடிக்கிறார். இதுதவிர ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்டோர் இத்திரைப்படத்தில் நடிக்கின்றனர்.

சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவில் தெலுங்கு, தமிழ் என இரு மொழிகளிலும் உருவாகி வருகிறது. இதுவரை மகேஷ் பாபுவின் தெலுங்கு படங்கள் தமிழுக்கு மொழிபெயர்ப்பு செய்து வெளியான நிலையில், தற்போது ஸ்பைடர் அவரது முழு நீள தமிழ்ப்படமாக அமைந்தது.

என்விஆர் நிறுவனம் இத்திரைப்படத்தை தயாரித்து வருகிறது. லைகா ப்ரோடக்ஷன்ஸ் மற்றும் ரிலையன்ஸ் என்டர்டெய்ன்மென்ட் ஆகிய நிறுவனங்கள்
இணைந்து கூட்டாக இப்படத்தை வெளியிடுகிறது.

சமீபத்தில் வெளியான ஸ்பைடர் டீஸர், சமூகவலைதளங்களில் சக்கைபோடு போட்டு வருகிறது. மேலும் பாடல் காட்சி படமாக்கும் விதமும் வெளியிடப்பட்டிருந்தது.

ரோமானியாவில் கடைசி பாடல் காட்சி படமாக்கப்பட்டு வருகிறது. செப்டம்பர் 27-ந் தேதி திரைக்கு வருகிறது. இந்நிலையில், திரைப்படம் குறித்து இயக்குநர் முருகதாஸ் புதுத் தகவல் ஒன்றை தெரிவித்தார்.

அதில், 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சென்னையை உலுக்கிய பயங்கர வெள்ளம் தொடர்பான காட்சிகள் இதில் இடம்பெற்றுள்ளது. கதைக்கு வலு சேர்ப்பதில் அது முக்கிய பங்கு வகிக்கும் என்றார்.

முன்னதாக, விவசாயிகள் பிரச்னையை நடிகர் விஜய் நடிப்பில் உருவான கத்தி படத்தில் இயக்குநர் முருகதாஸ் முன்னிலைப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் துபையில் கனமழை: விமான சேவை பாதிப்பு!

இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 7.4 சதவிகிதம் உயர்வு!

தமிழகத்துக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 02.05.2024

ஜிம் செல்பவரா நீங்கள்.. மாரடைப்பு குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை!

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்!

SCROLL FOR NEXT