மார்ச் 2014-ல் விகாஸ் பகால் இயக்கி வெற்றிகரமாக ஓடிய படம் 'குயின்'. இதில் குயினாக கலக்கியவர் கங்கனா ரானவத். இக்கட்ட சூழ்நிலையில், கைவிடப்பட்ட நிலையிலும், வாழ்க்கையின் முக்கியமான தருணத்தில் வஞ்சிக்கப்பட்ட நிலையில், அதையெல்லாம் தூர எறிந்துவிட்டு, தன் மனத்துக்குப் பிடித்த செயல்களை செய்வதும், கனவுகளைத் தொடர்ந்தும் சுதந்திரமாக இருப்பவள்தான் இந்த அரசி. இந்தியில் இப்படம் வெளியான சமயத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்தப் படத்தின் தமிழ் ரீமேக்கை முதலில் ரேவதி இயக்குவதாக இருந்தது. அதன் பின் ரமேஷ் அரவிந்த் இப்படத்தின் இயக்குனரானார். இப்படி ஏதோ ஒரு காரணத்தால் படம் தொடங்க தாமதம் ஏற்பட்டதால், இப்படத்தில் முதலில் நடிக்கவிருந்த தமன்னா விலகிவிட்டார். கங்கனா ரானவத் கதாபாத்திரத்தில் தற்போது காஜல் அகர்வால் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
ரமேஷ் அரவிந்த் இப்படத்தின் கதையை தமிழ் கலாச்சாரத்துக்கு ஏற்ற வகையில் சில மாற்றங்களை செய்துள்ளார். விரைவில் மதுரையில் படப்பிடிப்பு தொடங்கப்படும். அதைத் தொடர்ந்து லண்டன் மற்றும் பாரீஸில் படப்பிடிப்பு நடத்த முடிவு செய்துள்ளார்களாம்.
அனுராக் காஷ்யப் மற்றும் விக்கிரமாதித்யா தயாரித்த இப்படத்தினை வயாகாம் நிறுவனம் வெளியிட்டது. விமர்சகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் இப்படம் அமோக வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.