செய்திகள்

களைகட்டுமா பிக் பாஸ்? மீண்டும் உள்ளே நுழைந்த ஜூலி & ஆர்த்தி!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜூலி, ஆர்த்தி ஆகியோர் போட்டியாளர்களாக மீண்டும் நுழைந்துள்ளார்கள்.

எழில்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜூலி, ஆர்த்தி ஆகியோர் போட்டியாளர்களாக மீண்டும் நுழைந்துள்ளார்கள்.

சர்வதேச அளவில் மிகவும் பிரசித்தி பெற்ற நிகழ்ச்சி - பிக் பாஸ். தற்பொழுது இந்நிகழ்ச்சியை விஜய் தொலைக்காட்சியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். சமீபத்தில் இந்த நிகழ்ச்சி ஆரம்பமானது. இந்த நிகழ்ச்சியின் மூலம் நடிகர் கமல்ஹாசன் முதன் முறையாக தொலைக்காட்சியில் அடியெடுத்து வைத்துள்ளார். திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 8.30 மணிக்கும் ஒளிபரப்பாகிறது. சமூகவலைத்தளங்களில் பிக் பாஸ் குறித்த விவாதங்கள் அதிகமாக உள்ளன. 

பிக் பாஸ் நிகழ்ச்சியில் சில வாரங்களுக்கு முன்பு பிரபல நடிகை பிந்து மாதவி போட்டியாளராக உள்ளே நுழைந்தார். அதன்பிறகு புதுவரவாக நடிகை சுஜா, இளம் நடிகர் ஹரிஷ் கல்யாண், நடிகையும் விஜேவுமான காஜல் ஆகியோர் புதிய போட்டியாளர்களாக அறிமுகமானார்கள். 

இருப்பினும் ஓவியா, ஜூலி ஆகியோரின் வெளியேற்றத்துக்குப் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் சுவாரசியம் குறைந்தது. இதனால் டிஆர்பி ரேட்டிங்கும் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. புதிதாக உள்ளே நுழைந்த நால்வரும் சர்ச்சைகளில் பெரிதாக ஈடுபடாமல், அமைதியான முறையில் நடந்துகொள்வதால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் முன்பு போல சுவாரசியமும் பரபரப்பும் இல்லாமல் போயின.

இந்நிலையில் முன்னாள் போட்டியாளர்களான ஆர்த்தி, ஜூலி ஆகிய இருவரையும் மீண்டும் அழைத்துள்ளது விஜய் டிவி. இன்றைய பிக் பாஸ் விளம்பரத்தில் இருவரும் இடம்பெற்றுள்ளார்கள். இதையடுத்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் மீண்டும் சுவாரசியத்துக்குப் பஞ்சமிருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நீதிபதியை தாக்குவதா?வழக்குரைஞர் மீது கடும் நடவடிக்கை எடுக்க கார்கே வலியுறுத்தல்!

பிளாக் நூடுல்ஸ்... நிகிதா தத்தா!

என்னவென்று சொல்வதம்மா... ராஷி சிங்!

பத்திரிகையாளர் சந்திப்பில் காந்தார படக்குழுவினர் - புகைப்படங்கள்

ஜம்மு - காஷ்மீரில் ராணுவ நடவடிக்கையில் 2 வீரர்கள் மாயம்! தேடுதல் பணி தீவிரம்!

SCROLL FOR NEXT