செய்திகள்

போகன் தெலுங்கு ரீமேக்கில் ஹன்ஷிகா வேடத்தில் காத்ரீன் தெரேஸா!

காத்ரீன் மலையாளத்தில் இருந்து ‘மெட்ராஸ்’ திரைப்படம் வாயிலாக தமிழுக்கு அறிமுகமாகிப் பின் கோலிவுட்டில் இருந்து டோலிவுட்டுக்கு இடம் பெயர்ந்தார்.

சரோஜினி

தமிழில் ஜெயம் ரவி, அரவிந்த்சாமி நடிப்பில் வெளிவந்த ‘போகன்’ திரைப்படம் டோலிவுட்டில் ரீமேக் செய்யப்படவிருக்கிறது. இத்திரைப்படத்தில் ஜெயம் ரவி நடித்த வேடத்தில் நடிக்கவிருப்பது ரவி தேஜா என்றும், ஹன்ஷிகா மோத்வானி ஏற்று நடித்த வேடத்தில் நடிக்கவிருப்பது காத்ரீன் தெரேஸா என்றும் படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

காத்ரீன் மலையாளத்தில் இருந்து ‘மெட்ராஸ்’ திரைப்படம் வாயிலாக தமிழுக்கு அறிமுகமாகிப் பின் கோலிவுட்டில் இருந்து டோலிவுட்டுக்கு இடம் பெயர்ந்தார். டோலிவுட்டில் காத்ரீன் நடிப்பில் வெளிவந்த அனைத்துப் படங்களும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றவை. ‘ருத்ரம்மாதேவி’ முதல் கடந்த வருடத்தில் வசூலில் சாதனை புரிந்த அல்லு அர்ஜூனின் ‘சரைனோடு’ மற்றும் சமீபத்தில் வெளியான ராணாவின் ‘நேனே ராஜு... நேனே மந்திரி’  வரை காத்ரீன் இடம் பெற்ற திரைப்படங்கள் அனைத்திலும் தன்னை நம்பி வந்த ரசிகர்களை காத்ரீன் ஏமாற்றியதே இல்லை என்கிறார்கள் அவரது ரசிகர்கள். தான் நடித்த அத்தனை திரைப்படங்களிலும் தனது மாறுபட்ட நடிப்பால் ரசிகர்களின் மனம் கவர்ந்த காத்ரீன் தற்போது ‘போகனில்’ ஹன்ஷிகா ஏற்று நடித்த வேடத்தில் நடிக்கவிருப்பது அவரது நடிப்புத் திறனுக்குக் கிடைத்த பரிசு என்கிறது டோலிவுட். இந்தப் படத்தில் நடிப்பதன் வாயிலாக டோலிவுட்டில் காத்ரீனின் கிராஃப் மேலும் உயர வாய்ப்பிருப்பதாக அப்படத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பத்திரிகையாளர் சந்திப்பில் காந்தார படக்குழுவினர் - புகைப்படங்கள்

ஜம்மு - காஷ்மீரில் ராணுவ நடவடிக்கையில் 2 வீரர்கள் மாயம்! தேடுதல் பணி தீவிரம்!

அமித் ஷாவை எப்போதும் நம்பாதீர்கள்: மோடியை எச்சரித்த மமதா!

இரவில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

இந்திய விமானப் படையின் 93வது ஆண்டு விழா - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT