செய்திகள்

மெர்சல் பட டைட்டிலுக்கு காப்புரிமை!

DIN

தமிழ் சினிமாவில் அடுத்த பெரும் எதிர்ப்பார்ப்பு 'மெர்சல்' படத்தின் மீது தான். அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன், வடிவேலு ஆகியோர் நடித்துள்ள இப்படம் விஜய் ரசிகர்களுக்கு பெரும் கொண்டாட்டமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.  

சமீபத்தில் மெர்சல் படத்தின் `ஆளப் போறான் தமிழன்` என்ற பாடலில் இரண்டு கைகளை விஜய் தட்டுவது போன்ற இமோஜி டிவிட்டரில் வைரலான நிலையில் மெர்சல் படத்தின் தலைப்புக்கு காப்புரிமையை - (Trade Mark) படக்குழுவினர் பெற்றுள்ளனர். 

முதன் முறையாக இமோஜி மற்றும் காப்புரிமை வாங்கியுள்ள தென்னந்தியப் படமாக மெர்சல் விளங்குகிறது. இதற்கு முன்னால் திரைப்பட நிறுவனமொன்று தங்கள் நிறுவனத்தின் பெயருக்கு காப்புரிமை வாங்கியுள்ளது. ஆனால் ஒரு திரைப்படத்தின் பெயருக்கே ட்ரேட்மார்க் வாங்குவதென்பது இதுதான் முதன்முறையாகும். இனி மெர்சல் எனும் டைட்டிலை வேறு யார் பயன்படுத்தினாலும் அதற்கான ராயல்டி தொகையை செலுத்த வேண்டும்.

'மெர்சல்' என்ற பெயரில் வேறு எந்த பொருட்களையும் கூட விற்பனை செய்ய முடியாது. உதாரணமாக ஒரு பபுள் கம் தயாரிப்பு நிறுவனம் மெர்சல் என்ற பெயரை பயன்படுத்தமுடியாது. அதையும் மீறி இப்பெயரை யாரேனும் பயன்படுத்தினால் காப்புரிமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும். காப்புரிமை பெற்றது மெர்சல் படத்துக்கான தனித்தன்மையை அதிகரிக்கும் என்றும்,  இதனைப் பெற ஆறு மாத காலமானது என்றனர் இப்படக்குழுவினர்.  

'மெர்சல்' படத்தில் ஒரு பாடலை ராஜஸ்தானில் கடுமையான வெயிலில் கிட்டத்தட்ட மூன்றாயிரம் துணை நடிகர்களை வைத்து படமாக்கி உள்ளார்கள். இப்படத்தில் ஆக்‌ஷன் மற்றும் பாடல் காட்சிகள் பிரமாதமாக வந்துள்ளது என்கிறார்கள் படக்குழுவினர். விஜய்க்கு இப்படத்தில் மூன்று ரோல்கள் என்பது தெரிந்த விஷயம். இதில் ஒவ்வொன்றிலும் தனித்துவம் காட்ட மிகவும் மெனக்கிட்டுள்ளாராம் விஜய். அவருக்கான மூன்று கெட்டப்புக்களுக்கும் பதினைந்து இடங்களில் அசத்தலான காட்சியமைப்புகள் இடம்பெற்றுள்ளன என்றார் அட்லீ. அடுத்த வாரம் மெர்சலின் படத்தின் தீம் பாடல் மற்றும் டீஸர் வெளியாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாம்பே டைம்ஸ் ஃபேஷன் வீக் - புகைப்படங்கள்

ஒரு சிறிய காதல் கதை..!

சென்னை திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்

புது தில்லி-பாகல்பூா் சிறப்பு ரயில் இயக்கத்தில் திருத்தம் வடக்கு ரயில்வே அறிவிப்பு

கூகுளில் அதிகம் தேடப்படும் சுற்றுலா தலங்கள்! உங்களின் தேர்வு இவற்றில் எது?

SCROLL FOR NEXT