செய்திகள்

அமெரிக்காவில் 1 மில்லியன் டாலர் வசூலித்த முதல் தெலுங்கு 'ஏ' படம்!

அமெரிக்காவில் மிக வேகமாக 1 மில்லியன் டாலர் வசூலித்த சிறிய பட்ஜெட் படம் என்கிற பெருமையையும்...

எழில்

பாகுபலி 2 படத்துக்குப் பிறகு அர்ஜூன் ரெட்டி என்கிற மற்றொரு தெலுங்குப் படம் அனைவருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது. விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே நடிப்பில் சந்தீப் வங்கா இயக்கியுள்ள படத்துக்கு நல்ல விமரிசனங்கள் கிடைத்துள்ளதால் வசூலிலும் அசத்தி வருகிறது.

இந்நிலையில் இந்தப் படம் அமெரிக்காவில் மட்டும் 1 மில்லியன் டாலர் வசூலித்துள்ளது. அதாவது திங்கள் வரை அந்தப் படம் ரூ. 6.39 கோடி வசூலித்துள்ளது. அமெரிக்காவில் 'ஏ' சான்றிதழ் பெற்ற தெலுங்குப் படம் ஒன்று 1 மில்லியன் டாலர் வசூலித்துள்ளது இதுவே முதல்முறை.

அதற்கு முன்பு மகேஷ் பாபு நடித்து 2012-ல் வெளிவந்த பிஸினஸ்மேன் படம்தான் அமெரிக்காவில் அதிகம் வசூலித்த 'ஏ' படமாக (709,000 டாலர், ரூ. 4.53 கோடி) இருந்தது. அந்தச் சாதனையை அர்ஜுன் ரெட்டி தாண்டியுள்ளது. அதேபோல அமெரிக்காவில் மிக வேகமாக 1 மில்லியன் டாலர் வசூலித்த சிறிய பட்ஜெட் படம் என்கிற பெருமையையும் பெற்றுள்ளது. அமெரிக்காவில் முதலில் 90 இடங்களில் திரையிடப்பட்ட இந்தப் படம் அசத்தலான வசூலாலும் மக்களின் ஆதரவாலும் நாளை முதல் மேலும் 25 இடங்களில் திரையிடப்படவுள்ளது. 

அர்ஜுன் ரெட்டி: அமெரிக்கா - $1,007,767 (ரூ. 6.45 கோடி)

வியாழன் (ப்ரீமியர் காட்சிகள்) - $194,051 (ரூ. 1.24 கோடி)
வெள்ளி - $252,416 (ரூ. 1.61 கோடி)
சனி - $308,656 (ரூ. 1.97 கோடி)
ஞாயிறு - $174,582 (ரூ. 1.12 கோடி)
திங்கள் - $46,328 (ரூ. 30 லட்சம்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோவையில் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: 3 பேர் சுட்டுப் பிடிப்பு

திருச்சி ரயில்வே கோட்டத்துக்கு பாா்சல்கள் மூலம் ரூ. 3.25 கோடி வருவாய்

30 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லை கோவிந்தராஜப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்

உக்ரைனில் ரஷியா ஸ்திர முன்னேற்றம்

வாக்காளா் பட்டியல் எஸ்.ஐ.ஆா் பணிகள்: விவரம்பெற உதவி எண்கள் வெளியீடு

SCROLL FOR NEXT