செய்திகள்

மகளிர் கிரிக்கெட் குறித்த படத்தை இயக்குகிறார் பாடலாசிரியர் அருண்ராஜா காமராஜ்!

சமீபத்தில் நடைபெற்ற மகளிர் உலகக் கோப்பைக்கு முன்பே இந்தக் கதையை எழுதிவிட்டதாகவும்...

எழில்

பெண்கள் கிரிக்கெட் குறித்த படத்தை இயக்குகிறார் பாடலாசிரியர் அருண்ராஜா காமராஜ்!

பெண்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து படமொன்றை இயக்கவுள்ளார் பாடலாசிரியர் அருண்ராஜா காமராஜ். கபாலி படத்தில் நெருப்புடா பாடல் மூலம் கவனம் பெற்ற அருண்ராஜா இயக்குநராக அறிமுகமாகும் படம் இது. 

இதுகுறித்து ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது: 

இயக்குநர் ஆகவேண்டும் என்றுதான் திரைத்துறைக்குள் நுழைந்தேன். நாளைய இயக்குநர் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளேன். உதவி இயக்குநராகவும் பணியாற்றியுள்ளேன். பிறகுதான் நடிப்பு, பாடலாசியர் என்று மற்ற பொறுப்புகளிலும் ஈடுபட்டேன். எனினும் இயக்குநராவதுதான் என்னுடைய ஆசை என்றார். 

இந்தக் கதையை சமீபத்தில் நடைபெற்ற மகளிர் உலகக் கோப்பைக்கு முன்பே எழுதிவிட்டதாகவும் இந்திய அணி இறுதிச்சுற்று வரை முன்னேறியதும் அதற்கு மக்கள் அளித்த ஆதரவும் தன் கதை மீதான நம்பிக்கையை மேலும் அதிகப்படுத்தியுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், இந்தக் கதை மகள் - தந்தை உறவு குறித்து ஆழமாகப் பேசும் என்கிறார். 

கிரிக்கெட் தெரிந்த நடிகர்கள் தேவை என்பதால் அதற்குரிய தேடலில் உள்ளார் அருண்ராஜா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அஜீத் பவாரின் மரணம் வருத்தமளிக்கிறது: ராகுல் காந்தி இரங்கல்!

விமான விபத்தில் அஜீத் பவார் பலி! சம்பவ இடத்தின் காட்சிகள்!

நீதிக் கதைகள்! தர்மம் தலை காக்கும்!

அஜீத் பவாரின் நிறைவேறாத முதல்வர் கனவு! மகுடம் சூடாத மக்களின் மன்னர்!

மகாராஷ்டிரத்தில் 3 நாள்கள் துக்கம் அனுசரிப்பு! பாராமதி விரையும் முதல்வர்!

SCROLL FOR NEXT