செப்டம்பர் மாதம் தமிழ்த் திரையுலகம் ஏராளமான படங்களின் வெளியீடுகளைச் சந்திக்கவுள்ளது.
நாளை மூன்று படங்கள் வெளிவரவுள்ளன. விஜய் சேதுபதி நடித்துள்ள புரியாத புதிர், பாரதிராஜா, விதார்த் நடித்துள்ள குரங்கு பொம்மை மற்றும் சிறிய பட்ஜெட் படமான ஒரு கனவு போல.
அடுத்த வாரம் செப்டம்பர் 8 அன்று நெருப்புடா, கதாநாயகன், சர்வர் சுந்தரம், தப்பு தண்டா போன்ற படங்கள் வெளியாகின்றன.
செப்டம்பர் 15 அன்று மகளிர் மட்டும் சத்யா, துப்பறிவாளன் என மூன்று படங்கள் வெளியாகின்றன.
செப்டம்பர் 22 அன்று கொளஞ்சி என்கிற ஒரு படம் மட்டும் வெளியாகவுள்ளது. அதற்கடுத்த வாரம் இரு பெரிய படங்கள் வெளிவருவதால் இந்தத் தினத்தில் வேறு தமிழ்ப் படங்கள் வெளிவரத் தயாராக இல்லை.
செப்டம்பர் 27 அன்று ஸ்பைடர் படமும் செப்டம்பர் 29 அன்று வேலைக்காரன், பலூன் ஆகிய படங்களும் வெளிவரவுள்ளன.
தமிழ்: செப்டம்பர்
செப்டம்பர் 1
புரியாத புதிர்
குரங்கு பொம்மை
ஒரு கனவு போல
செப்டம்பர் 8
நெருப்புடா
கதாநாயகன்
சர்வர் சுந்தரம்
தப்பு தண்டா
செப்டம்பர் 15
மகளிர் மட்டும்
சத்யா
துப்பறிவாளன்
செப்டம்பர் 22
கொளஞ்சி
செப்டம்பர் 27
ஸ்பைடர்
செப்டம்பர் 29
வேலைக்காரன், பலூன்
இதில் சில படங்களின் வெளியீட்டுத் தேதிகள் கடைசி நேரத்தில் மாறுதலுக்கு உட்படவும் வாய்ப்புண்டு. இத்தனை படங்களில் புரியாத புதிர், மகளிர் மட்டும், சர்வர் சுந்தரம், துப்பறிவாளன், ஸ்பைடர், வேலைக்காரன் போன்ற படங்களின் முடிவுகளை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.