செய்திகள்

சென்னையில் திருமணம் நடைபெற்றதாக ஹிப் ஹாப் தமிழா ஆதி தகவல்! மனைவியைப் பற்றிய தகவல்களை வெளியிட மறுப்பு!

இசையமைப்பாளரும் நடிகருமான ஹிப்ஹாப் தமிழா ஆதியின் திருமணம் சென்னையில் நேற்று நடைபெற்றுள்ளது...

எழில்

இசையமைப்பாளரும் நடிகருமான ஹிப்ஹாப் தமிழா ஆதியின் திருமணம் சென்னையில் நேற்று நடைபெற்றுள்ளது. இத்தகவலை அவர் உறுதி செய்துள்ளார். 

இனிமேல் நான் சிங்கிள் கிடையாது. அனைவருடைய ஆசிர்வாதங்களையும் எதிர்பார்க்கிறேன். நன்றி என்று ட்விட்டரில் ஹிப்ஹாப் தமிழா ஆதி எழுதினார். இதையடுத்து திருப்பதியில் ஆதிக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக முதலில் தகவல்கள் வெளியாகின.

ஆனால் நேற்று ஆதிக்குத் திருமணம் நடைபெற்றுள்ளது. இதுபற்றி ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது: ஆமாம். எனக்குத் திருமணம் ஆகிவிட்டது. சென்னையில் நடைபெற்ற சிறிய விழாவில் நெருங்கிய உறவினர்கள் மத்தியில் திருமணம் நடைபெற்றது என்று அவர் கூறினாலும் மனைவியின் பெயர் மற்றும் இதர விவரங்களை வெளியிட மறுத்துள்ளார். எனினும், ட்விட்டரில் தனது திருமணப் புகைப்படத்தை ஆதி வெளியிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்குவழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

SCROLL FOR NEXT