முகப்பு
செய்திகள்

பிகாசூ-வாக நடிக்கும் பிரபல ஹாலிவுட் நடிகர்: திரைப்படமாகும் போகிமான் கார்டூன்

பிரபல கார்டூன் தொடரான போகிமான் விரைவில் திரைப்படமாக உள்ளது. இதில் பிகாசூ கதாபாத்திரத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் நடிக்கவுள்ளார்.

Updated On : 7 டிசம்பர், 2017 at 3:11 PM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 11:48 PM

போகிமான் கார்டூன் சிறுவர்கள் மத்தியில் மிகப்பிரபலம். இதனால் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் பலரும் இதை காணத் துவங்கினர். அதுமட்டுமல்லாமல் வீடியோ கேம் மற்றும் கார்ட்ஸ் விளையாட்டிலும் இவை பிரபலமாகின.

இந்த வெற்றியைத் தொடர்ந்து போகிமான் கோ என்ற விர்சுவல் ரியாலிட்டி விளையாட்டு ஸ்மார்ட்ஃபோன்களையும் ஆக்கிரமித்தது. இதையடுத்து பல இளசுகளும், பெருசுகளும் இதற்கு அடிமையாகினர்.

இந்நிலையில், இந்த போகிமான் கார்டூனை விரைவில் திரைப்படமாக்க ஹாலிவுட்டின் பிரபல யூனிவர்சல் பிக்சர்ஸ் திட்டமிட்டது. இதற்கு வெற்றித்திரைப்படமான கிராவிட்டி ஃபால்ஸ் கதாசிரியர் அலெக்ஸ் ஹிர்ஷ் மற்றும் கார்டியன்ஸ் ஆஃப் கேலக்ஸி திரைப்படத்தின் இணை எழுத்தாளர் நிக்கோல் பெர்ல்மேன் ஆகியோர் எழுத்தில் இக்கதை உருவாகிறது.

Advertisement

இதனிடையே, அந்த கார்டூனில் அதிகம் கவர்ந்த துப்பறிவாளன் பிகாசூ கதாபாத்திரத்தில் நடிப்பவர்கள் குறித்து பல்வேறு கருத்துகள் வெளியாகின. அதில், 'எக்ஸ் மேன்' புகழ் ஹக் ஜேக்மேன், டுவைன் 'தி ராக்' ஜான்ஸன் ஆகியோரது பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வந்தன.

இந்நிலையில், 'டெட் பூல்' திரைப்படத்தில் நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்ற ரியன் ரெனால்ட்ஸ் இதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இத்திரைப்படத்தை ஹாலிவுட்டில் வெளியிடும் முன்பே அந்த காரிடூனின் பூர்விகமான ஜப்பானில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.