செய்திகள்

தமிழ் ராக்கர்ஸுக்கு நன்றி தெரிவித்து தர்ம யுத்தம் தொடங்கிய 'தமிழ் படம் 2.0'

உமாகல்யாணி

மிர்ச்சி சிவாவின் நடிப்பில், தமிழ் படங்களை கேலி செய்து ஒரு தமிழ் படத்தை, தமிழ் படம் என்ற பெயரிலேயே ஏழு ஆண்டுகளுக்கு முன்னால் இயக்கினார் சி.எஸ்.அமுதன். அந்தப் படம் ரசிகர்களின் அமோக ஆதரவைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து அமுதன் இயக்கிய அவரது இரண்டாம் படத்தின் பெயர் ‘இரண்டாம் படம்’ (இப்படம் இன்னும் வெளிவரவில்லை).

இப்படி தலைப்புக்களில் வித்யாசத்தைக் காட்டும் அமுதனின் மூன்றாவது படத்தின் அறிவிப்பும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் சமீபத்தில் வெளியாகி அனைவரின் கவனத்தையும் கவர்ந்துள்ளது. காரணம் தமிழ்படத்தின் 2-ம் பாகமாக உருவாகவிருக்கும் இப்படத்தின் பெயர் ‘தமிழ்படம் 2.0’( சி.எஸ் அமுதனின் அடுத்த படத்தின் பெயர் நான்காவது படமா?).

சஷிகாந்த் தயாரிக்கும் இப்படத்தில் மிர்ச்சி சிவா, நிழல்கள் ரவி, சந்தான பாரதி, மனோபாலா, R.சுந்தர்ராஜன், சேத்தன், சதீஷ், ஜார்ஜ், OAK சுந்தர், அஜய் ரத்னம், திஷா பாண்டே, கலைராணி, ஐஸ்வர்யா மேனன், ஆகியோர் நடிக்கிறார்கள்.

இப்படத்தின் போஸ்டரில் தமிழ் படம் 2.0-வின் ரிலீஸ் தேதியும் குறிப்பிடப்பட்டு, தமது ஆன்லைன் திருட்டு பங்குதாரர்களாக தமிழ் ராக்கர்ஸ் குழுவினருக்கு சவால் விடும் விதமாக களம் இறங்கியுள்ளனர். இப்படம் மே 25-ல் படம் வெளியிடப்படும் எனவும், இதன் ஆன்லைன் பைரசி பார்ட்னரான ‘தமிழ் ராக்கர்ஸ்’ அடுத்த நாளில், அதாவது மே 26-ல் படத்தை ரிலீஸ் செய்து கொள்ளலாம் என்பது போன்று இந்த லோகோ அமைந்துள்ளது.

இந்த பட அறிவிப்பைக் குறித்து நடிகர் சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில் முக்கிய அறிவிப்பை டிசம்பர் 12 காலை 9 மணிக்கு அறிவிப்பார் என தெரிவித்திருந்தார். எல்லாமே இனிமே ஒரு மாதிரி தான் நடக்கும். 'தமிழ்படம் 2.O' வெளியீட்டு தேதி போஸ்டரை வெளியிடுவதில் சந்தோஷப்படுகிறேன் என்று குறிப்பிட்டு இந்த போஸ்டரையும் வெளியிட்டுள்ளார் சித்தார்த்.

பெயர் மற்றும் போஸ்டர் அறிவிப்பிலேயே அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ள தமிழ் படம் 2.0-வின் படப்பிடிப்பு டிசம்பர் 11-ம் தேதி சென்னையில் தொடங்கவிருக்கிறது. சமூக வலைத்தளத்தில் இப்படத்தில் சமீபத்திய போஸ்டர் முதல் அனைத்து செய்திகளும் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த படம் வெளிவரும் தினத்தில் தமிழ் ராக்கர்ஸ் எதிர்வினை எப்படியிருக்குமோ என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT