செய்திகள்

விக்ராந்த், விஷ்ணு விஷாலைத் தொடர்ந்து சென்னை அணி கேப்டன் ஆர்யாவும் சிசிஎல் போட்டியிலிருந்து விலகல்?

சிசிஎல் அணியின் இணையத்தளத்தில் சென்னை அணியின் கேப்டனாக ஆர்யாவின் பெயர்தான் இடம்பெற்றுள்ளது... 

எழில்

திரை நட்சத்திரங்கள் கலந்துகொள்ளும் நட்சத்திர கிரிக்கெட் எனப்படும் சி.சி.எல் போட்டியிலிருந்து சென்னை ரைனோஸ் அணியின் கேப்டன் ஆர்யாவும் விலகியுள்ளதாகத் தெரிகிறது. 

சென்னை ரைனோஸ் அணியின் பிரபல வீரர்களான விக்ராந்த், விஷ்ணு விஷால் ஆகிய இருவரும் இந்த வருட சிசிஎல் போட்டியில் கலந்துகொள்வதில்லை என்று முடிவெடுத்துள்ளார்கள். அவர்களுடைய அறிவிப்பு கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தை அளித்தது. 

சென்னை ரைனோஸ் அணியில் உள்ள நடிகர்களிடையே கருத்துவேறுபாடுகள் தோன்றியதால் இருவரும் இந்த முடிவை எடுத்துள்ளார்கள். இதுகுறித்து இருவரும் ட்விட்டர் வழியாகத் தங்கள் நிலைப்பாடுகளை வெளிப்படுத்தியுள்ளார்கள். இந்நிலையில் சென்னை ரைனோஸ் அணியின் கேப்டன் ஆர்யாவும் இந்த வருட போட்டியிலிருந்து விலகியுள்ளார். 

இதுபற்றி ஒரு பேட்டியில் ஆர்யா கூறியதாவது: சிசிஎல் போட்டி வேறு ஒரு தேதியில் நடப்பதாக இருந்தது. தற்போதைய தேதியில் பங்கேற்கப் பலரால் முடியவில்லை. அவர்களுக்குப் படப்பிடிப்புப் பணிகள் உள்ளன. எனவே இந்த வருடம் நிறைய புதிய வீரர்கள் அணியில் இடம்பெறவுள்ளார்கள். இந்த வருடம் நானும் விளையாடுவேனா எனத் தெரியாது என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் நேற்று தொடங்கப்பட்ட சிசிஎல் போட்டியில் சென்னை ரைனோஸ் அணியை பெங்கால் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. சென்னை அணியின் கேப்டனாக ஷாம் செயல்பட்டார். இதையடுத்து விக்ராந்த், விஷ்ணு விஷாலைப் போல ஆர்யாவும் இந்த வருட சிசிஎல் போட்டியிலிருந்து விலகியுள்ளதாகத் தெரிகிறது. ஆனால் சிசிஎல் அணியின் இணையத்தளத்தில் சென்னை அணியின் கேப்டனாக ஆர்யாவின் பெயர்தான் இடம்பெற்றுள்ளது. இதனால் ஆர்யாவின் நிலை குறித்து குழப்பங்கள் உருவாகியுள்ளன.  

நட்சத்திர கிரிக்கெட் போட்டி நேற்று தொடங்கியுள்ளது. சிசிஎல் போட்டியின் முதலிரண்டு வருடங்களில் சென்னை ரைனோஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. 2015-ல் இரண்டாம் இடம் பிடித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொன்முடி, சாமிநாதன் திமுக துணைப் பொதுச் செயலாளர்கள்: மு.க. ஸ்டாலின்

தமிழ்நாட்டின் முறைசாரா பெண் தொழிலாளர்களின் போராட்டம்: வலுசேர்க்கும் தொழிற்சங்கம்!

உ.பி. மதுராவில் 10 வயது தலித் சிறுமி பாலியல் வன்கொடுமை

இரு மாவட்டங்களில் இன்று கனமழை!

துக்கத்தில் முடிந்த திருமணக் கொண்டாட்டம்! பேருந்து விபத்தில் சகோதரிகள் மூவர் பலி!

SCROLL FOR NEXT