விஜய்காந்த் மகன் படப்பாடலை ட்விட்டரில் வெளியிட்ட பி.வி. சிந்து!
விஜய்காந்தின் மகன் சண்முகபாண்டியன் நடிக்கும் மதுர வீரன் படப்பாடலை பிரபல பாட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்...
விஜய்காந்தின் மகன் சண்முகபாண்டியன் நடிக்கும் மதுர வீரன் படப்பாடலை பிரபல பாட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
சண்முகபாண்டியன், சமுத்திரக்கனி, மீனாட்சி நடிப்பில் பிஜி முத்தையா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் மதுர வீரன். இசை - சந்தோஷ் தயாநிதி.
பிரீமியர் பாட்மிண்டன் லீக் (பிபிஎல்) போட்டியில் பங்குபெறும் சென்னை ஸ்மாஷர்ஸ் அணியின் உரிமையாளர் தேமுதிக தலைவர் விஜய்காந்தின் மூத்த மகன் விஜய் பிரபாகரன். அந்த அணியில் இடம்பெற்றிருப்பவர், பி.வி. சிந்து.
இந்நிலையில் விஜய் பிரபாகரனின் சகோதரரான சண்முகபாண்டியன் கதாநாயகனாக நடிக்கும் மதுர வீரன் படத்தின் உன் நெஞ்சுக்குள்ள என்கிற பாடலின் விடியோவை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் பி.வி. சிந்து. மேலும் படம் வெற்றியடையவும் அவர் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
மதுர வீரன் படம் பொங்கல் தினத்தன்று வெளிவரவுள்ளது.