முகப்பு
செய்திகள்

விபத்தில் மரணமடைந்த தனது ரசிகர் மன்ற நிர்வாகியின் இறுதிச் சடங்கிற்கு சென்று கதறி அழுத நடிகர் கார்த்தி!

தாம்பரம் மேம்பாலத்தில் நடந்த கார் விபத்தில் மரணமடைந்த திருவண்ணாமலையை சேர்ந்த தனது ரசிகர் மன்ற நிர்வாகியின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார் நடிகர் கார்த்தி.

Updated On : 27 டிசம்பர், 2017 at 12:23 PM
பகிர்:

தாம்பரம் மேம்பாலத்தில் நடந்த கார் விபத்தில் மரணமடைந்த திருவண்ணாமலையை சேர்ந்த தனது ரசிகர் மன்ற நிர்வாகியின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார் நடிகர் கார்த்தி.

தாம்பரம் இரும்புலியூர் மேம்பாலத்தில் தனது 3 நண்பர்களுடன் காரில் சென்றுள்ளார் 27-வயதான ‘கார்த்தி மக்கள் நல மன்றத்தின்’ திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் ஜீவண் குமார். எதிர்பாராத விதமாகக் கட்டுப்பாட்டை இழந்த கார் தடுப்பு சுவரை உடைத்துக் கொண்டு பாலத்தில் இருந்து கீழே விழுந்துள்ளது. இதில் காரில் பயணம் செய்த நான்கு பேருக்கும் பலத்த காயம் ஏற்படச் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். ஆனால், சிகிச்சை பலனின்றி ஜீவண் குமார் மற்றும் தினேஷ் ஆகிய இருவரும் உயிர் இழந்துள்ளனர். 

இந்தத் தகவலை கேள்விப்பட்டவுடன் திருவண்ணாமலைக்கு விரைந்த நடிகர் கார்த்தி ஜீவண் குமாரின் உடலைப் பார்த்து கதறி அழுதுள்ளார். ஜீவண் குமாருக்கு 3 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்துள்ள நிலையில் அவரது மரணம் குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. கார்த்தி உடன் மற்ற மாவட்ட ரசிகர் மன்ற நிர்வாகிகளும், ரசிகர்களும் நேரில் சென்று ஜீவண் குமாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி உள்ளனர்.

Advertisement

பயணத்தைவிட உயிர் முக்கியம் என்றும், இரவில் பயணம் செய்வதைத் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்வதாகவும் நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.