செய்திகள்

யுவன் ஷங்கர் ராஜா இசையில் இரும்புத் திரை இசை வெளியீட்டு விழா!

விஷால் பிலிம் பேக்டரி தயாரிப்பில், மித்ரன் இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில்

உமாகல்யாணி

விஷால் பிலிம் பேக்டரி தயாரிப்பில், மித்ரன் இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், ஜார்ஜ் சி வில்லியம் ஒளிப்பதிவில் விஷால், சமந்தா, அர்ஜுன், ரோபோ சங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘இரும்புத் திரை’படத்தின் டீசர் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த டீஸரை நடிகை சமந்தா தனது டிவிட்டரில் பகிர்ந்துள்ளார்.  

இரும்புத் திரை படத்துக்காக விஷால் லிங்குசாமி இயக்கத்தில் நடித்து வந்த சண்டைக்கோழி 2 படப்பிடிப்பை ஒத்தி வைத்திருந்தார். பொங்கல் வெளியீடாக வரவிருக்கும் இத்திரைப்படம், நடிகை சமந்தாவுக்கும் முக்கியமானது. காரணம் இதில் சமந்தா முதல் முதலாக ரதிதேவி என்ற பெயரில் மனநல மருத்துவராக நடித்துள்ளதாராம். தவிர திருமணத்துக்குப் பிறகு கலந்து கொண்ட படப்பிடிப்பு என்பதால் சம்ஸ் இப்படத்தை பெரிதும் எதிர்பார்க்கிறார். 

இந்நிலையில் இந்த டீஸர் வெளியான சில மணி நேரங்களில் வைரலானது. யுவனின் பின்னணி இசை மிரட்டலாக உள்ளது என்று ரசிகர்கள் பாராட்டுக்களைத் தெரிவித்தனர். இந்தப் படத்தின் இசை வெளிட்டு விழா ஜனவரி 6-ல் மலேசியாவில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீர்ப்புகளை மாற்றி எழுதும் போக்கு அதிகரிப்பு: உச்சநீதிமன்றம் ஆதங்கம்

‘டியூட்’ படப் பாடல்களை நீக்கக் கோரி இளையராஜா வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு

சிவா பிள்ளையல்ல... தமிழ்ப் பிள்ளை!

வளர்ச்சியடைந்த பாரதமே இலக்கு!

இந்தியாவின் உயிர்த்துடிப்பு!

SCROLL FOR NEXT