பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், தன்னுடைய முன்னாள் காதல், முன்னாள் காதலர்கள் குறித்து பேட்டியில் கூறியதாவது:
காதல் தோல்விகளைக் கையாள்வதில் நான் மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டவள். உடனே அந்தச் சோகத்திலிருந்து வெளியே வந்துவிடுவேன். காதல் உறவில் இருக்கும்போது நான் முழுமையாக என்னை ஈடுபடுத்திக்கொள்வேன். முறிவு ஏற்படும்போது அதிலிருந்து உடனே வெளியேறிவிடுவேன். பின்னால் திரும்பிப் பார்க்கமாட்டேன். என்னுடைய எல்லா முன்னாள் காதலர்களும் மீண்டும் என்னுடன் சேர விரும்பியவர்கள்தான். அதுவும் ஒரு சாதனை (சிரிக்கிறார்). வாழ்க்கையில் காதலைத் தாண்டி நிறைய உள்ளது.
ஒரு காதல் தோல்வியடையும்போது நம்மால் எதுவும் செய்யமுடியாது என்று தெரிந்தவுடன் அதிலிருந்து முழுவதுமாக வெளியேறிவிடுவேன். மீண்டும் அதனுள் செல்ல விரும்பமாட்டேன். காதலில் இருந்தவரை சிறப்பாக வாழ்ந்ததாக எண்ணிக்கொள்வேன்.
தூய்மையான காதலை அனுபவிப்பது குறித்து கேட்கிறீர்கள். ஏற்கெனவே அப்படியொரு காதல் உறவில் நான் உள்ளேன். ஏற்கெனவே எனக்கு அது நடந்துவிட்டது. இந்த வருடம் நான் திருமணம் செய்துகொள்ளவேண்டும் என எண்ணுகிறேன். அது நிச்சயம் நடக்கவேண்டும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.