செய்திகள்

என்னை கட்டுப்படுத்த வேண்டாம்: தயாரிப்பாளர் சங்கம் மீது சீறிய பார்த்திபன்!

DIN

சென்னை: சட்ட திட்டங்ககளுக்குஉட்பட்டு பட விளமபரங்கள் செய்ய வேண்டுமென்று என்னை கட்டுப்படுத்த வேண்டாம் என்று தயாரிப்பாளர் சங்கத்தின்ம மீது நடிகர் பார்த்திபன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நடிகர் பார்த்திபன் தயாரித்து, இயக்கி நடித்துள்ள 'கோடிட்ட இடங்களை நிரப்புக' திரைப்படம் பொங்கலன்று வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் சாந்தனு, பார்வதி நாயர் மற்றும் தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. அதினால் கலந்து கொண்ட பார்த்திபன், பட விளமபர கட்டுப்பாடுகளில் தயாரிப்பாளர் சங்கத்தின் மீது தனக்கு இருக்கும் அதிருப்தியை வெளிப்படுத்தினார். நிகழ்வில் அவர் பேசியதாவது:

தமிழகத்தில் மொத்தமுள்ள 1000 திரையரங்குகளில், 800 அரங்குகளில் விஜய் நடித்துள்ள 'பைரவா' திரைப்படம் வெளியாகியுள்ளது. மீதமுள்ள 200 இடங்களில் மட்டுமே 'கோடிட்ட இடங்களை நிரப்புக' வெளியாகியுள்ளது. 'பைரவா' போன்ற பெரிய படத்தோடு ஒப்பிடும் பொழுது, எனது படத்திற்கு செய்தித்தாள்களில் முழுப்பக்க அளவிற்கு விளம்பரம் கொடுக்க வேண்டியுள்ளது.

ஆனால் தமிழக திரைப்பட தயாரிப்பாளர் சங்கமானது அவர்களுடைய விதிகள் மற்றும் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டே விளம்பரங்கள் வெளியிடப்பட வேண்டும் என்று அறிவுறுத்துகிறது.ஆனால் 'பைரவா'வுக்கு இணையாக எனது 'கோடிட்ட இடங்களை நிரப்புக' படத்துக்கு திரையரங்குகள் கிடைக்கவில்லை. எனவே என்னுடைய விளம்பரங்களை கட்டுப்படுத்த முடியாது.

ஒன்று எங்களுக்கு சுதந்திரம் அல்லது சமத்துவம் கொடுங்கள் அல்லது விளம்பரம் செய்யும் விவிகாரத்தில் எங்களை கட்டுப்படுத்த முயற்சி செய்யாதீர்கள்.

இவ்வாறு அந்த நிகழ்வில் பார்த்திபன் தன்னுடைய அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓ மை ரித்திகா!

சென்டாயா, ஜெனிஃபர் லோபஸ்.. ஆடையலங்கார அணிவகுப்பில் ஹாலிவுட் கதாநாயகிகள்!

ஃபிளாப்! தோல்வியைச் சந்தித்த நடிகர்!

யூடியூபர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என விசாரிக்க வேண்டும்: இபிஎஸ்

குஜராத்: தாமரை சின்னம் பொறித்த பேனாக்களுடன் வாக்குச்சாவடி முகவர்கள்- காங்., குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT