செய்திகள்

ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் தலைவன் யார்? நடிகர் லாரன்ஸின் உணர்வுபூர்வமான பேச்சு!

DIN

ஜல்லிக்கட்டு பிரச்னைக்கு நிரந்தர தீர்வு வேண்டும். அதுவரை இந்த இடத்தைவிட்டு இம்மியளவும் நகரமாட்டோம் என்று நடிகர் லாரன்ஸ் கூறியுள்ளார்.

சென்னை மெரினாவில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டுப் பிரச்னை குறித்த போராட்டத்தில் கலந்துகொண்ட நடிகர் லாரன்ஸ் உணர்வுபூர்வமாகப் பேசியதாவது:

இந்தக் கூட்டத்துக்குத் தலைவனே இல்லை என்று எல்லோரும் சொல்கிறார்கள். இந்தக் கூட்டத்தின் தலைவன், தமிழ். அதுதான் நம்மை இங்கு இணைத்துள்ளது.

தர்மம் இல்லாமல் எதுவும் ஜெயிக்காது. நியாயம் இல்லாமலும் ஜெயிக்காது. இது தர்மமும் நியாயமும் கொண்ட போராட்டம். நாம் 5 வயதுவரை தாய்ப்பால் குடிக்கிறோம். ஆனால் சாகும்வரைக்கும் மாட்டுப்பால் குடிக்கிறோம். மாடு என்பத் தாய், என் தாய்கூட விளையாடகூடாது என்று சொல்வதற்கு நீ யார் பீட்டா. யார் பிச்சை கேட்டாலும் தாயே பிச்சை போடு என்றுதான் கேட்பான். அந்தளவுக்கு தாய் மதிப்பு கொண்டவர். எங்கள் தாய் மீது கை வைத்தால் சும்மா இருப்போமா? ஜல்லிக்கட்டு பிரச்னைக்கு நிரந்தர தீர்வு வேண்டும். அதுவரை இந்த இடத்தைவிட்டு இம்மியளவும் நகரமாட்டோம். 

எங்கெல்லாம் தமிழனுக்குப் பிரச்னை வந்ததோ அது அத்தனையையும் எதிர்க்கும் விதமாக மொத்தமாக சேர்ந்த கூட்டம் இது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணங்கான் வெளியீட்டு பணிகள் தீவிரம்!

தென்னிந்தியாவில் பாஜகவுக்கு வரவேற்பு; 100 தொகுதிகளில் வெல்லும்: அமித் ஷா

நத்தத்தில் திடீர் தீ விபத்து: ரூ. 40 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசம்!

தேவகெளடா பேரன் மீது நடவடிக்கை தேவை: அமித் ஷா

ஜீப் மீது லாரி மோதி விபத்து: 6 பேர் பலி

SCROLL FOR NEXT