செய்திகள்

சீனாவில் 40,000 திரையரங்குகளில் 2.0 வெளியாகும்: லைக்கா அறிவிப்பு

எழில்

ரஜினி - ஷங்கர் கூட்டணியில் உருவாகும் 2.O (எந்திரன் படத்தின் 2-ம் பாகம்) படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துவருகிறது. ரஜினிக்கு இணையான கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் நடிக்கிறார். கதாநாயகி - ஏமி ஜாக்சன். ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைத்துள்ளார். வசனம் - ஜெயமோகன். ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா-வும் முத்துராஜ் கலை இயக்குநராகவும் படத் தொகுப்பாளராக ஆண்டனியும் ஒலி வடிவமைப்பாளராக ஆஸ்கர் விருது பெற்ற ரசூல் பூக்குட்டியும் பணியாற்றுகிறார்கள். 

2.0 படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்றுள்ளது. 3டி தொழில்நுட்பத்தில் உருவாகிவருவதால் இப்படத்தின் கிராபிக்ஸ் பணிகள் அமெரிக்காவில் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இப்படத்தின் விளம்பரப் பணிகளை முடுக்கியுள்ளது லைக்கா நிறுவனம். இப்படத்தை விளம்பரப்படுத்த சர்வதேச சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக லைக்கா நிறுவனத்தின் தலைமைச் செயல் நிர்வாகியான ராஜூ மகாலிங்கம் சமீபத்தில் அறிவித்தார். 

2.0 படம் 3டியில் படமாக்கப்படுவது தொடர்பான கூட்டம் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திரையரங்கு அதிபர்கள் பலர் கலந்துகொண்டார்கள்.

லைக்கா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ராஜூ மகாலிங்கம் கூறியதாவது: 

படத்தின் பட்ஜெட், ரூ. 350 கோடியிலிருந்து ரூ. 400 கோடியாக அதிகரித்துள்ளது. கடைசியில் 3டி தொழில்நுட்பத்துக்கு மாற்றுவதற்குப் பதிலாக இந்தப் படம் ஆரம்பத்திலிருந்தே 3டி தொழில்நுட்பத்தில் படமாக்கப்படுகிறது. இந்தியாவின் முதல் நேரடி 3டி படம் 2.0 தான். 

சீனாவில் 2.0 படம் 40,000 திரையரங்குகளில் வெளியாகும். இந்த வருடக் கடைசியில் இந்த எண்ணிக்கை 50,000 ஆக அதிகரிக்கும். அதில் பாதி 3டி திரையரங்குகள். சீனாவில் இருபதாயிரத்துக்கும் அதிகமான 3டி திரையரங்குகள் உள்ளன. ஆனால் இந்தியாவில் ஆயிரத்து ஐந்நூறு திரையரங்குகளே உள்ளன. இந்தியாவில் இன்னும் அதிகமான 3டி திரையரங்குகள் உருவாகவேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். 

தமிழகத்தில் நிலவும் ஜிஎஸ்டி-கேளிக்கை வரி விவகாரத்தால் லண்டனில் உள்ள எங்கள் தலைமை ஒரு முடிவு எடுத்துள்ளது. ஜிஎஸ்டி விவகாரம் தொடர்பாகத் தெளிவான நிலை உருவாகும்வரை இந்தியாவில் படங்கள் தயாரிப்பதை நிறுத்தவுள்ளோம் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT