செய்திகள்

ஜிஎஸ்டி விவகாரம்: தமிழக அரசுக்கு ரஜினி வேண்டுகோள்!

எழில்

தமிழ்த் திரையுலகினரின் கோரிக்கையைத் தமிழக அரசு பரிசீலனை செய்யவேண்டும் என்று ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திரையரங்குகளுக்கு 28 சதவீத சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) விதிக்கப்பட்டுள்ளது. இந்த வரி விதிப்புக்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், மாநில அரசின் உள்ளாட்சி கேளிக்கை வரியும் திரையரங்குகளுக்கு கூடுதலாக விதிக்கப்பட்டுள்ளது. சுமார் 30 சதவீத கேளிக்கை வரி திரையரங்குகளுக்கு விதித்துள்ளது. மத்திய அரசின் ஜி.எஸ்.டி. வரியை ஏற்றுக்கொள்ளும் நேரத்தில், தமிழகஅரசின் கேளிக்கை வரிக்கு தமிழ்த் திரை அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

தமிழக அரசின் 30 சதவீத கேளிக்கை வரியை எதிர்த்து தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு நாள்களாக 1,200 தியேட்டர்கள் காலவரையின்றி மூடுவதாக உரிமையாளர்கள் அறிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கேளிக்கை வரியை எதிர்த்து இரண்டாவது நாளாக தமிழகம் முழுவதும் திரையரங்குகள் மூடப்பட்டதால் ரூ.35 கோடி வரையில் இழப்பு ஏற்பட்டுள்ளதாக திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்தனர். திரையரங்குகள் வேலை நிறுத்தத்தால் தமிழகம் முழுவதும் திரைத்துறையைச் சேர்ந்த சுமார் 10 லட்சம் பேர் வேலை இழந்துள்ளதாகத் தெரிகிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் செவ்வாய்க்கிழமை (ஜூலை 4) பேச்சுவார்த்தை நடைபெறும் எனக் கூறப்பட்டாலும், பேச்சுவார்த்தை நடைபெறவில்லை. இதனால் போராட்டம் புதன்கிழமையும் (ஜூலை 5) தொடரும் நிலை ஏற்பட்டுள்ளது. திரையரங்குகளில் புதன்கிழமை (ஜூலை 5) அனைத்துக் காட்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து ரஜினி ட்விட்டர் பக்கத்தில் தன் கருத்தைத் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது: தமிழ்த் திரையுலகை நம்பியுள்ள லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு திரையுலகினரின் கோரிக்கையைப் பரிசீலனை செய்யுமாறு தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்முறை வாக்களித்த மகிழ்ச்சியில்...

மழைச் சாரலிலும் வாக்களிக்க நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்!

கேரளத்தில் 5 பேருக்கு வெஸ்ட் நைல் காய்ச்சல்!

பூவே.. செம்பூவே..!

வாக்களித்த பிரபலங்கள்!

SCROLL FOR NEXT