செய்திகள்

கன்னடப் படத்தில் அறிமுகமாகிறார் அக்‌ஷரா ஹாசன்?

கதாநாயகியின் கதாபாத்திரம் அக்‌ஷராவுக்குச் சரியாகப் பொருந்தும்... 

எழில்

அக்‌ஷரா ஹாசன் ஷமிதாப் படத்தில் அறிமுகமானார். தற்போது அஜித்தின் விவேகம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். கூடவே மற்றொரு ஹிந்திப் படத்திலும் நடித்துவருகிறார்.

இந்நிலையில் அக்‌ஷரா ஹாசன், கன்னடப் படத்தில் நடிக்கவுள்ளார். நாகசேகர் இயக்கத்தில் விக்ரம் ரவிச்சந்திரன் அறிமுகமாகும் படத்தில் நடிக்க அக்‌ஷரா ஹாசனிடம் பேசப்பட்டு வருகிறது. 

இதுகுறித்து இயக்குநர் நாகசேகர் கூறியதாவது: கதாநாயகியின் கதாபாத்திரம் அக்‌ஷராவுக்குச் சரியாகப் பொருந்தும். பேச்சுவார்த்தை ஆரம்பக்கட்டத்தில் உள்ளது என்று கூறியுள்ளார். இதையடுத்து ரவிச்சந்திரனின் மகன் அறிமுகமாகும் படத்தில் அக்‌ஷரா ஹாசனும் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மிஸ்பண்ணிடாதீங்க... எய்ம்ஸ்-இல் 3,500 நர்சிங் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

வங்க மொழி சர்ச்சை: நீண்ட பதாகைகளுடன் போராடிய கால்பந்து ரசிகர்கள்!

வெளியுறவு கொள்கையின் பேரழிவு! கார்கே

திருப்பதி அறக்கட்டளைக்குத் தொழிலதிபர் ரூ.1 கோடி நன்கொடை!

நாளை (ஆக. 8) மறுவெளியீடாகும் சுந்தரா டிராவல்ஸ்!

SCROLL FOR NEXT