செய்திகள்

கமலுக்கு ஒரு பிரச்னை என்றால் திரையுலகம் பின்னால் நிற்கும்: விஷால் பேட்டி

DIN

தமிழ்த் திரைப்படத் துறையில் சிறந்த படம், நடிகர், நடிகை, தொழில்நுட்பக் கலைஞர்களுக்கான விருதுகளை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று அறிவித்தார். 2009-ஆம் ஆண்டு முதல் 2014-ஆம் ஆண்டு வரை ஆறு ஆண்டுகளுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, 2009-ஆம் ஆண்டு முதல் 2014-ஆம் ஆண்டு வரையிலான விருதுகளின் பெயர்ப் பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இதற்காக, தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வரைச் சந்தித்து விஷால் நன்றி தெரிவித்தார். பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 

திரைப்பட விருதுகள் அறிவித்ததற்கு அரசுக்கு நன்றி. இனி தாமதம் இல்லாமல் வருடந்தோறும் திரைப்பட விருதுகள் வழங்க வேண்டும் என்று அரசுக்குக் கோரிக்கை வைக்கிறோம். திரைப்படங்களுக்கு மானியம் வழங்கியதால் சிறு தயாரிப்பாளர்களுக்கு நன்மை கிடைத்துள்ளது. 

பிக் பாஸ் சர்ச்சை குறித்துக் கேட்கிறீர்கள். கமல் சார் ஒரு விஷயத்தில் இறங்கினால், அது பற்றி முழுமையாக தெரிந்துகொண்டுதான் இறங்குவார். பிக்பாஸ் சர்ச்சை எல்லாம் விஷயமே இல்லை. பிக் பாஸ் என்பது ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சி. தவறான நிகழ்ச்சியாக இருந்தால் கண்டிப்பாக கமல் பங்கேற்கமாட்டார். அதேசமயம் திரையுலகுக்கு முன்னுதாரணமாக இருக்கும் கமலை அமைச்சர் ஒருமையில் பேசியிருந்ததைத் தவிர்த்திருக்கலாம். கமல்ஹாசனுக்கு ஒரு பிரச்னை என்றால் திரையுலகமே பின்னால் நிற்கும் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

நாகர்கோவில் அருகே கடல் அலையில் சிக்கி 5 பயிற்சி மருத்துவர்கள் பலி!

கோடை வெயிலுக்கு இடையே கனமழை: அடுத்த 2 நாள்களுக்கு!

SCROLL FOR NEXT