செய்திகள்

ஏ.ஆர். ரஹ்மானுக்கு மொழிகள் கிடையாது: தனுஷ் கருத்து

ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் தமிழ்ப் பாடல்கள் அதிகமாகப் பாடப்பட்டது குறித்து எழுந்துள்ள சர்ச்சையில்...

எழில்

ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் தமிழ்ப் பாடல்கள் அதிகமாகப் பாடப்பட்டது குறித்து எழுந்துள்ள சர்ச்சையில் ரஹ்மானுக்கு ஆதரவாக நடிகர் தனுஷ் கருத்து தெரிவித்துள்ளார். 

தனது 25 வருட திரைப்பயணத்தையொட்டி பல்வேறு பகுதிகளில் இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார் ஏ.ஆர். ரஹ்மான். 'நேற்று இன்று நாளை’ என்கிற இந்த இசை சுற்றுப்பயணத்தின் முதல் நிகழ்ச்சி ஜுலை 8 அன்று லண்டனில் நடைபெற்றது. இந்த இசை நிகழ்ச்சியில் பென்னி தயால், நீத்தி மோகன், ஹரிசரன், ஜொனிடா காந்தி, ஜாவத் அலி போன்ற பிரபல பாடகர்கள் பங்கேற்றார்கள். 

இந்நிலையில் இந்த இசை நிகழ்ச்சி தற்போது சர்ச்சைக்கு ஆளாகியுள்ளது. லண்டனில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் தமிழ்ப் பாடல்கள் அதிகமாகப் பாடப்பட்டதாகப் புகார்கள் வந்துள்ளன. சமூகவலைத்தளங்களில் பல்வேறு புகார்கள் இதுகுறித்துப் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனால் சமூகவலைத்தளத்தில் மீண்டுமொரு தமிழ் - ஹிந்தி விவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ரஹ்மானுக்கு ஆதரவாக நடிகர் தனுஷ் தன் கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். ட்விட்டரில் அவர் எழுதியதாவது:

ஏ.ஆர். ரஹ்மானுக்கு மொழிகள் கிடையாது. அவருடைய மொழி, இசை மட்டுமே. வேறு எதுவும் இல்லை என்று ரஹ்மானுக்கு ஆதரவாகத் தன் கருத்தை வெளிப்படுத்தியுள்ளார் தனுஷ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியா எந்த அச்சுறுத்தலுக்கும் அடிபணியாது: வெங்கையா நாயுடு

என்எல்சி நிகர லாபம் ரூ.839.21 கோடி

ரிஷப ராசிக்கு தன்னம்பிக்கை! தினப்பலன்கள்!

ரூ.2,250 கோடியில் விரைவில் ஏற்றுமதி ஊக்குவிப்பு திட்டம்: அதிகாரிகள் தகவல்

பழங்குடியினரின் வாழ்வியலை ஆவணப்படுத்த தொல்குடி மின்னணு களஞ்சியம் இணையம்: அமைச்சா் மதிவேந்தன் தொடங்கி வைத்தாா்

SCROLL FOR NEXT