முகப்பு
செய்திகள்

தனுஷின் வேலையில்லா பட்டதாரி 2 வெளியீடு திடீரென தள்ளிவைப்பு!

இந்தப் படம் அடுத்த வாரம் 28-ம் தேதி வெளியாகவிருந்தது. இந்நிலையில் திடீரென இப்படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

Updated On : 20 ஜூலை, 2017 at 2:52 PM
பகிர்:

தாணு மற்றும் தனுஷ் தயாரிப்பில் உருவாகியுள்ள வேலையில்லா பட்டதாரி 2 படத்தை செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ளார். தனுஷ், அமலா பால், கஜோல் போன்றோர் நடித்துள்ளார்கள்.

இந்தப் படம் அடுத்த வாரம் 28-ம் தேதி வெளியாகவிருந்தது. இந்நிலையில் திடீரென இப்படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே தமிழ்த் திரையுலகில் மந்த நிலை நிலவுகிறது. டிக்கெட் விலை அதிகமானதால் திரையரங்குகளுக்குக் குறைவான ரசிகர்களே வருகிறார்கள். இந்த வாரம் வெளியாகும் விக்ரம் வேதா படத்தின் முடிவுதான் தமிழ் சினிமாவுக்கு அடுத்த நடவடிக்கைகளுக்கு முக்கிய காரணமாக அமையவுள்ளது. அடுத்ததாக, விவேகம் படம் ஆகஸ்ட் 10 அன்று வெளிவரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர படத்தின் தணிக்கை வேலைகளும் தாமதமாகும் எனத் தெரிகிறது.

இந்த இக்கட்டான நிலையில் ஜூலை 28 அன்று படத்தை வெளியிட தாணு மற்றும் தனுஷ் ஆகிய இரு தரப்புக்கும் சம்மதமில்லை. எனவே தேதி குறிப்பிடப்படாமல் படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. விவேகம் படம் வெளியான இரு வாரங்கள் கழித்து வேலையில்லா பட்டதாரி 2 படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.