முகப்பு
செய்திகள்

படம் வெளிவரும் நாள்தான் பிறந்தநாள்: தனுஷ்

இத்தகவலை வெளியிட்டுள்ள தனுஷ், படம் வெளியாகும் நாள்தான் தனக்குப் பிறந்தநாள்... 

Updated On : 21 ஜூலை, 2017 at 4:16 PM
பகிர்:

தாணு மற்றும் தனுஷ் தயாரிப்பில் உருவாகியுள்ள வேலையில்லா பட்டதாரி 2 படத்தை செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ளார். தனுஷ், அமலா பால், கஜோல் போன்றோர் நடித்துள்ளார்கள்.

இந்தப் படம், அடுத்த வாரம் 28-ம் தேதி, அதாவது தனுஷின் பிறந்தநாளன்று வெளியாகவிருந்தது. ஆனால் திடீரென இப்படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே தமிழ்த் திரையுலகில் மந்த நிலை நிலவுகிறது. டிக்கெட் விலை அதிகமானதால் திரையரங்குகளுக்குக் குறைவான ரசிகர்களே வருகிறார்கள். இன்று வெளியாகியுள்ள விக்ரம் வேதா படத்தின் முடிவுதான் நிலவரம் குறித்த தெளிவான நிலையை எடுத்துச்சொல்லும் என நம்பப்படுகிறது. அடுத்ததாக, விவேகம் படம் ஆகஸ்ட் 10 அன்று வெளிவரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே தேதி குறிப்பிடப்படாமல் படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. விவேகம் படம் வெளியான இரு வாரங்கள் கழித்து வேலையில்லா பட்டதாரி 2 படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இப்படத்துக்குத் தணிக்கையில் யு சான்றிதழ் கிடைத்துள்ளது. இத்தகவலை வெளியிட்டுள்ள தனுஷ், படம் வெளியாகும் நாள்தான் தனக்குப் பிறந்தநாள் என்றும் கூறியுள்ளார். 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.