முகப்பு
செய்திகள்

யாருடா எங்க பாப்பாவை அழவைச்சது?: ஓவியாவை மெச்சும் தமிழ்த் திரையுலகம்!

ஓவியாவுக்கு ஆதரவு தெரிவித்து தமிழ்த் திரையுலகினர் சமூகவலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்...

Updated On : 29 ஜனவரி, 2024 at 4:30 PM
பகிர்:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகை ஓவியாவுக்கு ஆதரவு தெரிவித்து தமிழ்த் திரையுலகினர் சமூகவலைத்தளங்களில் கருத்து தெரிவித்துவருகிறார்கள்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளார் நடிகை ஓவியா. அவருடைய குணாதிசயங்களுக்கும் துணிச்சலான பேச்சுக்கும் நாளுக்கு நாள் அதிகப் பாராட்டுகள் கிடைத்து வருகின்றன. கடந்த சில நாள்களாக இந்நிகழ்ச்சியில் ஓவியாவுக்கும் காயத்ரி-நமீதா ஆகியோருக்கும் இடையே ஏராளமான கருத்துமோதல்கள் உருவாகின். பரணி போல ஓவியாவும் இந்த நிகழ்ச்சியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இதனால் சமூகவலைத்தளங்களில் ஓவியாவின் ரசிகர்கள்  ஓவியாவுக்கு ஆதரவாகவும் காயத்ரி ராகுராம், நமீதா, ஜூலி, சக்தி ஆகியோருக்கு எதிராகவும் ஏராளமான பதிவுகளை எழுதிவருகிறார்கள். தமிழ்த் திரையுலகினர் சமூகவலைத்தளம் வழியாக ஓவியாவுக்குத் தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளார்கள்.

எந்தப் பெயரும் குறிப்பிடாமல் ஒரு பதிவை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் நடிகை த்ரிஷா. ஆனால் அது பிக் பாஸ் நிகழ்ச்சிக்கும் ஓவியாவுக்கும் பொருத்தமாக இருப்பதால் த்ரிஷாவின் பதிவுக்குப் பாராட்டுகள் கிடைத்து வருகின்றன. ட்விட்டரில் அவர் கூறியதாவது: எந்த ஒரு சூழலிலும் யாராக இருந்தாலும் உலகின் எந்தப் பகுதியில் இருந்தாலும் அது நிஜமாகவே இருந்தாலும் அல்லது வேடிக்கையாக இருந்தாலும், எளியவர்களைக் கொடுமைப்படுத்துதல் என்பது கோழைத்தனமான செயலாகும் என்று எழுதியுள்ளார்.

ட்விட்டரில் ஓவியாவுக்கு ஆதரவாகத் தமிழ்த் திரையுலகினர் வெளியிட்ட பதிவுகள்:

முழு கட்டுரையைப் படிக்க →