செய்திகள்

ஆக.6-இல் மெட்ராஸ் பிலிம் சொசைட்டி வைர விழா: சென்னையில் 5 நாள்கள் சர்வதேச திரைப்பட விழா

DIN

மெட்ராஸ் பிலிம் சொசைட்டி வைர விழா சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள ரஷிய கலாசார மையத்தில் வரும் ஆகஸ்ட் 6-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது.
இதைத் தொடர்ந்து 5 நாள்கள் சர்வதேச திரைப்பட விழா நடைபெறவுள்ளது. ஆகஸ்ட் 7-ஆம்தேதி முதல் 11-ஆம் தேதிவரை ரஷிய கலாசார மையத்தில் ரஷியா, ஜப்பான், கொரியா, ஜெர்மனி, மலேசிய திரைப்படங்கள் மற்றும் இந்திய குறும்படங்கள் திரையிடப்படவுள்ளன.
விழாவின்போது மெட்ராஸ் பிலிம் சொசைட்டி- நல்லி திரைப்பட விருதுகளும் வழங்கப்படவுள்ளன.
கடந்த 2016-ஆம் ஆண்டு திரையிட்ட படங்களிலிருந்து சிறந்த படம், சிறந்த இயக்குநர், கதாநாயகன், நாயகி, வில்லன் நடிகர், நகைச்சுவை நடிகர், குணச்சித்திர நடிகர்-நடிகை, வசனகர்த்தா, வாழ்நாள் சாதனையாளர் விருதுள் வழங்கப்படும். இந்த விழாவில் சிறந்த குறும்படங்களுக்கும் விருதுகள் வழங்கப்படவுள்ளன. விழாவில் சென்னையில் உள்ள ஜப்பான், ரஷியா, கொரியா, ஜெர்மனி மற்றும் மலேசிய தூதரக அதிகாரிகள், திரைப்படத் துறையினர், குறும்பட இயக்குநர்கள் கலந்துகொள்கின்றனர்.
தமிழ் திரையுலகில் பணியாற்றியவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படும். இந்த விருது மெட்ராஸ் பிலிம் சொசைட்டி வழங்கும் நல்லி விருதுகள் என்று அழைக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஞ்சலி.. அஞ்சலி..!

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு வாகனங்கள் மீது துப்பாக்கிச்சூடு: 5 வீரர்கள் காயம்

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT