முகப்பு
செய்திகள்

பாலிவுட் நடிகர் இந்தர் குமார் காலமானார்!

சல்மான் கானுடன் சில படங்களில் நடித்துள்ள பாலிவுட் நடிகர் இந்தர் குமார் இன்று காலமானார். அவருக்கு வயது 43.

Updated On : 29 ஜனவரி, 2024 at 4:32 PM
பகிர்:

பாலிவுட் நடிகர் இந்தர் குமார் இன்று காலமானார். அவருக்கு வயது 43.

அந்தேரியில் உள்ள தனது வீட்டில் இந்தர் குமாருக்கு இன்று காலை 2 மணிக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் எதிர்பாராதவிதமாக மரணமடைந்தார்.  இந்தர் குமாருக்கு பல்லவி என்கிற மனைவி உள்ளார்.

1996-ல் தனது திரைப்பட வாழ்க்கையை ஆரம்பித்த இந்தர் குமார், துணை நடிகராக பல படங்களில் நடித்துள்ளார். பிரபுதேவா இயக்கிய வாண்டட் படத்திலும் நடித்துள்ளார். சல்மான் கானின் நண்பர் என்பதால் அவருடன் இணைந்து பல படங்களில் நடித்து கவனம் பெற்றார்.

இன்று மாலை இறுதிச் சடங்குகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.