செய்திகள்

80 களின் நட்சத்திர சங்கமம் இந்த வருடம் சீனாவிலாம்!

சரோஜினி

80 களில் தமிழ் சினிமா உலகில் கலக்கிய நடிகர், நடிகைகள் பலரும் ஒவ்வொரு வருடமும் ஒருங்கிணைந்து ஒரு மெகா சந்திப்பை நிகழ்த்தி அளவளாவி மகிழும் கொண்டாட்ட நிகழ்வு கடந்த 2009 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து பின்பற்றப் படுகிறது. முதலில் இப்படி ஒரு அருமையான சந்திப்பைத் திட்டமிட்டவர்கள் சுஹாசினி மணிரத்னமும், மலையாள நடிகை லிஸ்ஸியும் தான். லிஸ்ஸியின் பண்ணை வீட்டில் முதல் முறை நடந்த நிகழ்வு பின்வரும் ஆண்டுகளில் முறையே மெகா ஸ்டார் சிரஞ்சீவி, மோகன்லால், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கன்னட நடிகர் அம்பரீஷ் என்று பலரால் பொறுப்பேற்றுக் கொள்ளப் பட்டு கடந்த ஆண்டுகளில் சிறப்புற நடைபெற்றது. நிகழ்வுகள் நடந்து முடிந்ததும், நட்சத்திர சங்கமத்தில் எடுக்கப் பட்ட புகைப்படங்கள் இணையதளங்களில் வண்ணமயமாக அந்தந்த நடிகர், நடிகைகளே பதிவேற்றுவார்கள். இந்த மெகா சந்திப்பைப் பற்றிய செய்திகள் ரசிகர்களுக்கு மட்டுமல்ல சம்மந்தப் பட்ட அந்தந்த நடிகர், நடிகைகளுக்குமே ஒவ்வொரு வருடமும் மறக்க முடியாத பொக்கிஷ நினைவுகளாக மனதில் பதிந்து விடும்.

இந்த வருடம் இந்த நட்சத்திர சங்கமம் ஜூன் முதல் வாரத்தில் சீனாவில் நடக்க இருப்பதாக செய்திகள் கசிகின்றன. தேதி அதிகாரபூர்வமாக இன்னும் அறிவிக்கப் படவில்லை. சூப்பர் ஸ்டார், உலக நாயகன், மெகா ஸ்டார், முதல் திரையுலகின் முன்னணி நடிகர்களில் இருந்து ராதிகா, குஷ்பூ, ரேவதி, உட்பட பிரபலமான நடிகைகள் வரை எவருமே எந்த ஒரு வருடமும் இந்த நிகழ்வில் பங்கு பெறத் தவறியதில்லை. இந்த முறையும் அப்படித்தான் என்றே நினைக்கிறோம். 

ஆக... இந்த முறை சீனாவில் இருக்கும் இந்தியர்களுக்கு தென்னிந்திய நடிகர், நடிகைகளைப் பார்த்துப் பரவசப்படும் வாய்ப்பு கிட்டியிருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில வா்த்தக அணி தென் மண்டல பயிலரங்கம்

மரண வியாபாரிகள்!

பிளஸ் 2 தோ்வு தென்காசி எம்கேவிகே.மெட்ரிக் பள்ளி சிறப்பிடம்

தென்காசி ரயில் நிலையம் அருகே தங்கியிருந்த முதியவா்கள் முதியோா் இல்லத்தில் ஒப்படைப்பு

பிரதமா் பேச்சுக்கு எதிா்ப்புத் தெரிவித்து அளித்த புகாருக்கு ரசீது கோரி டிஎஸ்பியிடம் மனு

SCROLL FOR NEXT