செய்திகள்

அனுஷ்காவின் ‘பாஹ்மதி’ திரைப்படம் தாமதமாவது ஏன்?

சரோஜினி

தென்னிந்திய திரையுலகில் அனுஷ்கா, ஹீரோக்களுக்கு இணையாகக் கருதப் படுபவர். ‘அருந்ததி’ படம் பெற்றுத் தந்த வெற்றியால் அப்படி ஒரு அதிர்ஷ்டம் அனுஷ்காவைத் தேடி வந்தது. அருந்ததியைத் தொடர்ந்து வானம், ருத்ரம்ம தேவி, பஞ்சமுகி என ஹீரோவைக் காட்டிலும் தன்னை முன்னிறுத்தும் கதையம்சமுள்ள திரைப்படங்களில் நடித்து ஹீரோக்களுக்கு இணையாக தனது படங்களின் வசூலிலும் கலக்கிக் கொண்டிருந்தார் அனுஷ்கா.

அந்த சமயத்தில் அனுஷ்காவை வைத்து தொடங்கப் பட்ட படமே ‘பாஹ்மதி’ அருந்ததி திரைப்படத்தைப் போல நிகழ்காலத்திலும், கடந்த காலத்திலுமான நிகழ்வுகளை மையமாகக் கொண்டு எடுக்கப் பட்டு வரும் ஆக்‌ஷன் திரில்லர் வகைத் திரைப்படமான இப்படம் அருந்ததிக்கு இணையான வெற்றியைப் பெற்றுத் தரம் என நம்பி அனுஷ்காவை நாயகியாக்கி தொடங்கப் பட்டது. அருந்ததி வெற்றிக்குப் பிறகு தெலுங்குத் தயாரிப்பாளர்கள் அனுஷ்காவை நம்பி எத்தனை அதிகத் தொகையையும் திரைப்படங்களில் முதலீடு செய்ய அஞ்சுவதில்லை எனும் நிலையில் தொடங்கப் பட்ட இந்த திரைப்படம் தற்போது அனுஷ்காவின் உடல் எடையைக் காரணம் காட்டி தாமதமாக்கப் பட்டுக் கொண்டிருக்கிறது.

‘சைஸ் ஜீரோ’ திரைப்படத்துக்காக அனுஷ்கா நிஜமாகவே தனது உடல் எடையை அதிகரித்ததால் தற்போது மீண்டும் குறைக்க முடியாமல் அவஸ்தைப் படுவதாக செய்திகள் கசிகின்றன. நேரலை ஒன்றில் அனுஷ்காவே தெரிவித்தபடி அவர் சாதாரணமாக நன்றாக உண்டாலே உடல் எடை தானாக அதிகரிக்கத் தொடங்கி விடுமாம். இந்நிலையில் சைஸ் ஜீரோவுக்காக உண்ட உணவில் ஏறிப்போன எடையைக் குறைக்க பிரம்ம பிரயத்தனம் செய்து வருகிறார் அனுஷ்கா. அனுஷ்கா எடையைக் குறைத்த பின்னரே பாஹ்மதி படம் அடுத்த கட்டத்தை நோக்கி நகரும் என்று தகவல்கள் உலவுகின்றன. சைஸ் ஜீரோ திரைப்படத்துக்கும், பாகுபலி 2 க்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் தான் அனுஷ்கா சிங்கம் - 3 படத்தில் நடித்தார். அப்போதும் அவரது உடல் எடை பிற திரைப்படங்களோடு ஒப்பிடும் போது வெகு அதிகமே! பாகுபலி 2 திரைப்படத்திலும் கூட குண்டாக இருந்த அனுஷ்காவை ஒல்லியாகக் காட்ட மும்பை VFX ஸ்டுடியோ ஒன்றில் தொழில்நுட்ப வேலைகள் நடைபெற்றனவாம். ஆனால் பாகுபலியில் பின்பற்றப்பட்ட அதே முறை தற்போது இந்தத் திரைப்படத்தின் VFX தொழில்நுட்பத்திலும் பின்பற்றப் படுமா என்பது குறித்து போதுமான தகவல்கள் இல்லை. இப்போதைக்கு அனுஷ்காவின் எடை குறைப்பிற்காக மட்டுமே படப்பிடிப்பு தாமதமாகிறது என்றூ கூறப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

SCROLL FOR NEXT