செய்திகள்

ராணாவின் ‘நானே ராஜா, நானே மந்திரி’  தெலுங்கு பட டீஸர்!

டீஸர் வெளியிடப்பட்டு 6 மணி நேரத்தில் யூ டியூப் ட்ரெண்டிங்கில் இரண்டாம் இடத்தில் இருந்தது. டீஸரைக் கண்டு களித்த அனைவருக்கும் எனது அன்பு உரித்தாகட்டும். என்றும் ராணா கூறியுள்ளார்.

சரோஜினி

பாகுபலி 1 & 2 வால் தமிழ்நாட்டிலும் ராணா டகுபதிக்கு ரசிகப் பட்டாளம் கணிசமாக அதிகரித்திருக்கிறது. பாகுபலி-2 வை அடுத்து ராணா நடிப்பில் வெளிவரவிருக்கும் புதிய திரைப்படம் ‘நேனே ராஜா, நேனே மந்திரி’ இதுவே தமிழில் நானே ராஜா, நானே மந்திரியாக டப் செய்யப்படவிருக்கிறது. இந்தப் படத்தின் டீஸர் வெளியீட்டைத் தொடர்ந்து ட்விட்டரில் தனது ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்த ராணா; 

இந்த வாழ்வில் தான் அடைந்த அத்தனை வெற்றிகளையும் தனது தாத்தாவும், மறைந்த பிரபல தென்னிந்திய தயாரிப்பாளருமான டி.ராமாநாயுடு அவர்களுக்கே சமர்ப்பணம் செய்வதாக கூறியதோடு, தாத்தா இப்போது இல்லையென்றாலும் அவருடைய ஆசிர்வாதம் மழை போல எப்போதும் தன்னை வர்ஷித்துக் கொண்டே இருக்கும் எனவும் கூறினார்.

நேற்று வெளிவந்த ‘நேனே ராஜூ, நேனே மந்திரி’ டீஸரைப் பார்த்திருந்தால், உங்களது தாத்தா ராமாநாயுடு என்ன சொல்லியிருப்பார்? என்று ரசிகர் ஒருவர் ட்விட்டர் சாட்டிங்கில் கேள்வி கேட்க அதற்கு பதில் அளிக்கும் விதமாக ராணா மேற்கண்ட பதிலைக் கூறினார்.

டீஸர் வெளியிடப்பட்டு 6 மணி நேரத்தில் யூ டியூப் ட்ரெண்டிங்கில் இரண்டாம் இடத்தில் இருந்தது. டீஸரைக் கண்டு களித்த அனைவருக்கும் எனது அன்பு உரித்தாகட்டும். என்றும் ராணா கூறியுள்ளார்.

தேஜா இயக்கத்தில் ராணாவோடு, காஜல் அகர்வால், கேதரின் தெரேஸா, நவ்தீப், அசுதோஷ் ராணா உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்திருக்கின்றனர். ராணாவுக்கு இதில் அரசியல்வாதி கேரக்டராம்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விம்ஸ் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியில் உலக உறுப்பு தான தின விழிப்புணா்வு

வாழப்பாடி அருகே இரு பைக்குகள் நேருக்குநோ் மோதல்: மாணவா் உள்பட இருவா் உயிரிழப்பு

சேலம் ரயில் நிலையத்தில் விரைவு ரயில் பெட்டியின் கண்ணாடிகள் உடைப்பு: இளைஞரிடம் விசாரணை

தியாகி தீரன் சின்னமலை நினைவு தினம்: நினைவுச் சின்னத்தில் தமிழக அரசு மரியாதை

பாகிஸ்தான்: 7 வயது சிறுவன் மீது பயங்கரவாத வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT