செய்திகள்

இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கும் பாகுபலி பிரபாஸின் கிளீன் ஷேவ் லுக்!

விமானத்தில் வைத்து எடுக்கப் பட்டுள்ள அவரது இந்த புதிய புகைப்படத் தோற்றம் இணையத்தில் பலமுறை பகிரப்பட்டு வைரலாகிக் கொண்டிருக்கிறது

சரோஜினி

பாகுபலி 1&2 திரைப்படங்களில் நீண்ட கேசத்துடனும், தாடியுடனும் பிரபாஸை கண்டுகளித்த அவரது ரசிகர்களுக்கு, அடுத்த ஆச்சர்யம் தயார். அது பிரபாஸின் கிளீன் ஷேவ் லுக். கடந்த ஒரு மாத காலமாக அமெரிக்க டூரில் இருந்த பிரபாஸ் தற்போது இந்தியா திரும்பியுள்ள நிலையில் விமானத்தில் வைத்து எடுக்கப் பட்டுள்ள அவரது இந்த புதிய புகைப்படத் தோற்றம் இணையத்தில் பலமுறை பகிரப்பட்டு வைரலாகிக் கொண்டிருக்கிறது. ஒரு வேளை இது பிரபாஸின் புதிய திரைப்படமான சாஹூவிற்கான  தோற்றமாக இருக்கலாம். அல்லது பாகுபலியில் நீண்ட தலைமுடி, தாடியுடன் நடித்த அலுப்பில் இம்மாதிரியான கிளீன் ஷேவ் தோற்றத்துக்கு அவர் மாறி இருக்கலாம். 

100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகிக் கொண்டிருப்பதாகக் கருதப்படும் பிரபாஸின் அடுத்த படமான சாஹூவை சுஜீத் இயக்குகிறார். இசை ஷங்கர் ஈசன் லாய், கலை மற்றும் புரடக்ஸன் டிஸைன் சாபு சிரில். இப்படத்தின்  நாயகி யார்? என இன்னும் அறிவிக்கப் படவில்லை. காலா படத்தின் ஹியூமா குரேஸி, காத்ரீன கைஃப், காஜல் அகர்வால், மீண்டும் அனுஷ்கா எனச் சிலரது பெயர் பரிசீலனையில் உள்ளதாகத் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அறிமுகமானது விவோ ஒய் 400! தள்ளுபடி விலையில் பெறுவது எப்படி?

ஜஸ்பிரித் பும்ராவின் சாதனையை சமன்செய்த முகமது சிராஜ்!

உலோகம், ஆட்டோ துறை பங்குகள் ஏற்றத்தை தொடர்ந்து சென்செக்ஸ், நிஃப்டி உயர்வுடன் நிறைவு!

மாளவிகா மோகனன் பிறந்த நாளில் 3 திரைப்பட போஸ்டர்கள்!

ஒரு வெளிநாட்டுப் பெண் இந்தியரை திருமணம் செய்ய 3 காரணங்கள்... அடேங்கப்பா!

SCROLL FOR NEXT