செய்திகள்

சென்னை திரும்பினார் ரஜினி! 2 மாதங்களில் ரசிகர்களை மீண்டும் சந்திக்கத் திட்டம்!

ஜூன் 24 முதல் காலாவின் 2-ம் கட்ட படப்பிடிப்பு தொடங்குகிறது. இரண்டு மாதங்களில் ரசிகர்களை மீண்டும் சந்திப்பேன்...

எழில்

காலா படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு முடிந்து ரஜினி சென்னை திரும்பியுள்ளார்.

ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற பரபரப்பான சூழலில் 2.0 படத்தையடுத்து பா.இரஞ்சித் இயக்கத்தில் நடிக்கிறார் ரஜினி. இதன் தலைப்பு - காலா கரிகாலன். நடிகர் தனுஷ் தனது வுண்டர்பார் நிறுவனத்தின் சார்பில் இப்படத்தை தயாரிக்கிறார். இப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு என 3 மொழிகளில் வெளியாகிறது. இதற்கு முன்பு ரஜினியை வைத்து கபாலி படத்தை இயக்கினார் பா.இரஞ்சித். அப்படத்தின் வெற்றிக்குப் பிறகு மீண்டும் ரஜினியை இயக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்துள்ளது.

கபாலி படத்தைத் தொடர்ந்து சந்தோஷ் நாராயணன் இப்படத்துக்கு இசையமைக்கிறார். ஹூமா குரேஷி, சமுத்திரக்கனி, நானா படேகர் உள்ளிட்ட சிலர் இப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளனர். இது ரஜினியின் 164-வது படம்.

காலா படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்றது. அது நேற்றுடன் முடிவடைந்ததையடுத்து இன்று மும்பையிலிருந்து சென்னை திரும்பினார் ரஜினி.

விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, ஜூன் 24 முதல் காலாவின் 2-ம் கட்ட படப்பிடிப்பு தொடங்குகிறது. இரண்டு மாதங்களில் ரசிகர்களை மீண்டும் சந்திப்பேன் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அடுத்த படத்தின் படப்பிடிப்பை முடித்த மஞ்ஞுமெல் பாய்ஸ் இயக்குநர்!

நிலவோடு பிறந்தவளா... மெஹ்ரீன் பிர்சாடா!

பதவி ராஜிநாமாவிற்கு பிறகு முதல்முறையாக ராஜஸ்தான் செல்லும் தன்கர்

95% சேவை மீட்டெடுப்பு: இண்டிகோ அறிவிப்பு!

கோவா : இரவு விடுதியில் பயங்கர தீவிபத்து! 23 பேர் பலி!

SCROLL FOR NEXT