செய்திகள்

கடைசிப் படத்தை அறிவித்து நடிப்புக்கு முழுக்கு போடவிருக்கும் பிரபல வாரிசு நடிகர்!

நடிப்புக்கு முழுக்குப் போட்டு விட்டு தனது தந்தை நிர்வகித்து வரும் தங்களது குடும்பத்திற்கு சொந்தமான ‘ஸ்ரீ வித்யா நிகேதன்’ குழுமப் பள்ளிகளின்  நிர்வாகத்தை தந்தையை அடுத்து தான் ஏற்றுக் கொள்வதற்காகவே

சரோஜினி

பிரபல டோலிவுட் நடிகரும், கல்வித் தந்தையுமான மோகன்பாபுவின் இளைய மகன் மஞ்சு மனோஜ், தற்போது தான் நடித்துக் கொண்டிருக்கும் இரண்டு படங்களுடன் தனது நடிப்புலக பங்களிப்புக்கு முழுக்கு போடுவதாக அறிவித்திருக்கிறார். மோகன்பாபு தெலுங்கில் மட்டுமல்ல, தமிழிலும் ரஜினி, கமலுடன் சில படங்களில் இணைந்து நடித்திருக்கிறார். சென்னை ஒய்.எம்.சி.ஏ கல்லூரியில் உடற்கல்வி ஆசிரியராக சில வருடங்கள் பணியாற்றிய அனுபவமும் அவருக்கு உண்டு. உடற்பயிற்சி ஆசிரியர், நடிகர், கல்வியாளர், என்பதைத் தாண்டி சூப்பர் ஸ்டாரின் நெருங்கிய நண்பர் என்ற வகையில் மோகன்பாபுவை தமிழ் ரசிகர்களும் நன்கறிவர்.

மோகன் பாபுவுக்கு இரு மகன்களும் ஒரே ஒரு மகளும் உண்டு. மூவரில் மூத்தவர்கள் இருவரும் திரைத்துறையில் தங்களது பங்களிப்பைத் தொடரும் நிலையில் மஞ்சு மனோஜ் இப்படி அறிவித்திருப்பது டோலிவுட்டில் மஞ்சு மனோஜ் ரசிகர்களுக்கு ஆச்சர்யமளிக்கும் செய்தியாகி இருக்கிறது. நடிப்பில் இருந்து விலகுவதற்கான காரணத்தை மஞ்சு மனோஜ் தெரிவிக்கவில்லை என்றாலும், அவரது நட்பு வட்டாரங்களில் பரவியுள்ள யூகங்களின் அடிப்படையில்... நடிப்புக்கு முழுக்குப் போட்டு விட்டு தனது தந்தை நிர்வகித்து வரும் தங்களது குடும்பத்திற்கு சொந்தமான ‘ஸ்ரீ வித்யா நிகேதன்’ குழுமப் பள்ளிகளின்  நிர்வாகத்தை தந்தையை அடுத்து தான் ஏற்றுக் கொள்வதற்காகவே மஞ்சு இப்படி ஒரு முடிவெடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

தனது கடைசிப் படமாக மஞ்சு மனோஜ் அறிவித்த ‘ஒக்கடு மிகிலடு’ (ஒருவரும் மிஞ்சப் போவதில்லை) திரைப்படத்தில் தான் ஏற்ற இரு வேடங்களில் ஒன்றாக, மறைந்த விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் வேடமேற்று மஞ்சு நடித்திருப்பதாக கூறப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

'நீங்கள் உண்மையில் இந்தியராக இருந்தால்...' - ராகுல் காந்திக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்!

நான் திமுகவின் பி டீமா? பன்னீர் செல்வம் விளக்கம்!

செத்த பொருளாதாரம்: அவமரியாதையே தவிர அர்த்தம் கொள்ளக் கூடாது: சசி தரூர்!

கோபி, சுதாகர் படத்தின் போஸ்டர் வெளியீடு!

நான் அழுதுவிடுவேன் என பயம் வந்துவிட்டது!: Kamal Hassan | Agaram foundation

SCROLL FOR NEXT