செய்திகள்

அதிக வருவாய் ஈட்டும் இந்திய நடிகர் யார்? போர்ப்ஸ் தகவல்!

இந்தப் பட்டியலில் பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோன் போன்ற இந்திய நடிகைகள்...

எழில்

சர்வதேச அளவில் கடந்த ஓர் ஆண்டில் அதிக வருவாய் ஈட்டிய பிரபலங்கள் 100 பேரின் பட்டியலை வெளியிட்டுள்ளது போர்ப்ஸ் பத்திரிகை. அதில் மூன்று இந்திய நடிகர்கள் இடம்பிடித்துள்ளார்கள். 

இந்திய அளவில் முதலிடத்தில் உள்ளவர் ஷாருக் கான். சர்வதேச அளவில் 65-வது இடத்தைப் பிடித்துள்ள ஷாருக் கான் ரூ. 245  கோடி வருவாய் ஈட்டியிருப்பதாக போர்ப்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது. ஜுன் 1, 2016 முதல் ஜுன் 1, 2017 வரையிலான வருவாய் கணக்கிடப்பட்டுள்ளது. படச் சம்பளம் மற்றும் விளம்பர வருவாய் என ஒரு வருடத்தில் கிடைக்கும் ஒட்டுமொத்த வருமானத்தின் கணக்கீடு இதுவாகும். ஜோகோவிச், டைகர் வுட்ஸ், ரியானா, பிரிட்னி ஸ்பியஸ் போன்ற பிரபலங்களை விடவும் அதிக வருவாய் ஈட்டியுள்ளார் ஷாருக் கான். 

இவரை விடவும் சிறிது குறைவாக அதாவது ரூ. 238 வருவாய் ஈட்டியுள்ள சல்மான் கான், இந்தப் பட்டியலில் 71-வது இடத்தைப் பிடித்துள்ளார். ரூ. 228 கோடியுடன் அக்‌ஷய் குமார் 80-வது இடத்தில் உள்ளார். 

இந்தப் பட்டியலில் பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோன் போன்ற இந்திய நடிகைகள் யாரும் இடம்பெறவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

'நீங்கள் உண்மையில் இந்தியராக இருந்தால்...' - ராகுல் காந்திக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்!

நான் திமுகவின் பி டீமா? பன்னீர்செல்வம் விளக்கம்!

செத்த பொருளாதாரம்: அவமரியாதையே தவிர அர்த்தம் கொள்ளக் கூடாது: சசி தரூர்!

கோபி, சுதாகர் படத்தின் போஸ்டர் வெளியீடு!

நான் அழுதுவிடுவேன் என பயம் வந்துவிட்டது!: Kamal Hassan | Agaram foundation

SCROLL FOR NEXT